கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்.. நாளை, நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. நாகராஜா திடலில் இருந்து நாளை தொடங்கும் ஊர்வலமானது சொத்தவிளை கடற்கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: " பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, கிருஷ்ணன்கோவில், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் வடசேரி, புத்தேரி ரோடு, நான்குவழி சாலை, அப்டா மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.

Vinayagar idol

கோட்டார், செட்டிகுளம், ராமன்புதூர், பால்பண்ணை, பார்வதிபுரம், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரயில் நிலையம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம் செல்லும் வாகனங்கள் டெரிக் சந்திப்பு, அனந்தன்பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம் சானல்கரை, தொல்லவிளை சானல்கரை, வல்லன்குமாரன்விளை சானல்கரை, வேதநகர், பறக்கை வழியாக செல்ல வேண்டும். அல்லது ராமன்புதூர், ஆயுதப்படை மைதான சாலை, பட்டகாசலியன்விளை, இருளப்பபுரம், பறக்கை ரோடு சந்திப்பு, நாயுடு ஆஸ்பத்திரி வழியாக செல்லலாம்.

நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள், வடசேரி, புத்தேரி ரோடு, அப்டா மார்க்கெட் சந்திப்பு, தேரேக்கால் புதூர், புதுக்கிராமம், தேரூர், சுசீந்தரம், மகாதானபுரம் வழியாக செல்லலாம். அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ராஜாக்கமங்கலம், குளச்சல், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், திங்கள் நகர், தக்கலை, மார்த்தாண்டம் மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேலும் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம், தெங்கம்புதூர், மணக்குடி மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் கோட்டார் ரயில் நிலைய வாயிலில் தற்காலிகமாக செயல்படும் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலை மற்றும் குளச்சல் பகுதிகளிலிருந்து நெல்லை செல்லும் அனைத்து வாகனங்களும் களியங்காடு சந்திப்பு, சன் கல்லூரி சாலை, இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும். காவல்கிணறு, தோவாளை, திருப்பதிசாரம் வழியாக தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்க்கெட்டிலிருந்து வலது புறமாக திரும்பி புத்தேரி சாலையில் செல்ல வேண்டும்.

காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில் நகருக்கு வரும் வாகனங்கள் அப்டா மார்க்கெட், புத்தேரி, களியங்காடு சந்திப்பு, பார்வதிபுரம் வழியாக நாகர்கோவில் நகருக்குள் வர வேண்டும். மணவாளக்குறிச்சிஈத்தாமொழி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் மேலகிருஷ்ணன்புதூர் நோக்கி செல்ல அனுமதி இல்லை. மேலும் ஈத்தாமொழி சந்திப்பிலிருந்து அனைத்து வாகனங்களும் சுண்டப்பற்றிவிளை வட்டக்கரை வழியாக நாகர்கோவில் திருப்பி விடப்படும்.

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் மணக்குடி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மணக்குடி உப்பளம் சந்திப்பு வழியாக ஈத்தங்காடு, சுசீந்தரம் வழியாக திருப்பி அனுப்பப்படும். நாகர்கோவிலிலிருந்து தெங்கம்புதூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் பறக்கை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்படும். இதுபோல மணவாளக்குறிச்சி கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறுவதால் அப்பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மேலும் 2-வது நாளாக நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+