என்கிட்ட தப்பா நடந்துக்கறான்.. சீக்கிரம் வாங்க.. பொய்யான புகார்.. மிரள வைத்த பெண்.. ஷாக் வீடியோ
பணத்தை திருப்பி கேட்க சென்ற இளைஞரை பெண் மிரட்டிய வீடியோ வைரலாகிறது
Recommended Video
குமரி: "இங்க ஒருத்தன் வந்து என்கிட்ட தப்பா நடந்துக்கிறான்.. ஸ்டேஷன்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா" என்று ஒரு பெண் போனில் பேசவும் மிரண்டு கொதித்துபோய்விட்டார் அந்த இளைஞர்! குமரியில் நடந்த இந்த சம்பவம்தான் வீடியோவாக பற்றிக் கொண்டு எரிகிறது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே. மணிகண்டன். இவரது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பது போலும்.
அதனால் வெளிநாட்டுக்கு போய் குடும்ப கடனை அடைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக 8 மாசத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல முடிவு செய்து, நாகை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சாலோம் டிராவல்ஸில் பணமும் கட்டினார்.

மணிகண்டன்
ஆனால், நீண்ட நாட்களாகியும் டிராவல்ஸ் ஆபீசில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை பற்றி தகவலும் சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால் கடுப்பான மணிகண்டன், வெளிநாடு போகவில்லையானாலும் பரவாயில்லை, பணத்தையாவது திருப்பி வாங்கலாம் என்று டிராவல்ஸ் ஆபீஸ் சென்றார்.

கெட்ட வார்த்தை
அங்கு இருந்து ஒரு டிராவல்ஸ் பெண் ஊழியரிடம், பணத்தை திரும்பி தருமாறு மணிகண்டன் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பணத்தை தர முடியாது என்று சொல்லவும், மணிகண்டனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. என் பணத்தைதானே நான் கேட்கிறேன், என் பணத்தை எனக்கு தந்துடுங்க என்றதற்கு, அந்த பெண் இளைஞனை கெட்ட கெட்ட வார்த்தையில் பேச தொடங்கிவிட்டார்.

பாலியல் தொல்லை
"இப்படி ஒரு பெண் கெட்ட வார்த்தையில திட்டறீங்களே" என்று இளைஞன் கேட்டார். அதற்கு பெண் "பணம் தர முடியாது.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ.. இப்படியே இங்க நின்னு கேட்டுட்டு இருந்தால், எனக்கு பாலியல் தொல்லை குடுத்தேன்னு புகார் தந்துடுவேன்.. மண்ணெண்ணெயை ஊத்தி கொளுத்திபுடுவேன். என் கண்முன்னாடி நிக்காதே.. போயிடு" என்று மிரட்டல் விடுத்தவாறே செல்போனை எடுத்து காதில் வைக்கிறார்.

மிரட்டல் வீடியோ
இளைஞனோ, "நீங்க யாருங்க போன் பண்றணுதுக்கு.. என் பணத்தை குடுத்துடுங்க" என்று கதறுகிறார். ஆனால் அந்த பெண்ணோ, "என்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கறான்.. கிளம்பி வாங்க.. ஸ்டேஷன்ல உங்களுக்கு தெரிஞ்ச ஆளு இருக்கா" என்று கேட்கிறார். நியாயம் கேட்க வந்த இளைஞனை, பணம் தராமல் ஏமாற்றியதுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசில் புகார் தர துணிந்த இந்த பெண்ணின் மிரட்டல் வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications