கன்னியாகுமரி தீபா.. மாடியில் கேட்ட அலறல் சத்தம்.. ஓடிப்போய் பார்த்த மாமியார்.. விரைந்த போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சுயஉதவிக்குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இளம்பெண்எடுத்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. போலீசார் இந்த விவகாரம் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவும், விபரீதமாகவும் முடிந்துவிடுகிறது. நிதானம் தவறி சுற்றியுள்ள சூழ்நிலைகளை மனதில் வைத்து சிலர் சில நொடிகளில் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்கள். அவமானம் நடந்ததாக கருதும் போதும், தனக்கு ஏமாற்றம் நடந்ததாக கருதும் போது, தோல்விகளை சந்திக்கும் போது, கேலி செய்யும் போது, சண்டைகளின் போது, கடன்கள் அதிக அளவு வாங்கி அதை கட்ட வழி தெரியாத போது, இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் விபரீத முடிவெடுக்கிறார்கள்.

அந்த ஒரு நொடி யோசித்தால் எல்லாமே சரியாகிவிடும். ஆனால் அதை பற்றி யோசிக்காமல் வாழ்க்கையில் இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நினைத்து தவறாக முடிவெடுத்து தாங்கள் அழிவதுடன், தன் குடும்பத்தினரையும் தீராத வேதனையில் தள்ளவிடுகிறார்கள்.. அப்படியான ஒரு சம்பவம் தான் நாகர்கோவில் அருமனை அருகே நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாங்கோடு கல்லறமூடு பகுதியை சேர்ந்த ஷானு என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருருகிறார். இவருடைய மனைவி தீபாவுக்கு 27 வயதாகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலை பிடிக்கவில்லை எனக்கூறி ஷானு சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் 6 தினங்கள் கழித்து முன்பு மீண்டும் அவர் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். இதையடுத்து ஷானுவின் பெற்றோர், பாட்டி மற்றும் தீபா, ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுயஉதவிக்குழுவில் சேர்ந்து தீபா பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே பணம் கொடுக்கல், வாங்கலில் தீபாவுக்கும், குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு தீபா மனமுடைந்த நிலைக்கு சென்றிருக்கிறார். கடந்த 12ம் தேதி இரவு வீட்டின் மேல் மாடிக்கு தீபா சென்றார். பின்னர் அவரது அலறல் சத்தம் பயங்கரமாக கேட்டிருக்கிறது. உடனே மாமியார் மற்றும் உறவினர்கள் ஓடி சென்று பார்த்துள்ளார்கள்.
அப்போது தீபா தீயில் கருகிய நிலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாடிக்கு சென்ற தீபா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் சுயஉதவிக்குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் தீபா தற்கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications