Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி கள்ளக்காதலனுக்கு கனவிலும் எதிர்பார்க்காத சம்பவம்.. பதைபதைக்க வைத்த பவித்ரா

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நம்முடைய நாட்டை பொறுத்தவரை, திருமணம் என்பது ஒரு உறவு என்பதையும் தாண்டி, இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், சமீபகாலமாகவே திருமணம் மீறிய உறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது..இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. சமீபத்தில்கூட, கள்ள உறவில் அதிகம் ஈடுபடும் டாப் 10 நகரங்களில் முதன்மையானதாக காஞ்சிபுரம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இதோ இந்த கன்னியாகுமரி கொடுமையை பாருங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள குமாரகோவில் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (36).. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் பவித்ரா. இந்த தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.

Kanyakumari love Nagercoil

இந்நிலையில் 33 வயது பவித்ராவுக்கும், திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாசின் நண்பரான ரமேஷூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், கடந்த 30ந் தேதி இரவு , கிருஷ்ணதாஸ், ரமேஷ், விமல் ஆகியோர் வில்லுக்குறியை அடுத்துள்ள கொற்றிப்பாறைவிளையில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

ஆனால் மறுநாள் காலையில் கிருஷ்ணதாஸ், ரத்த வெள்ளத்தில் அதே கட்டிடத்தில் பிணமாக கிடந்துள்ளார்.. அவரது உடம்பெல்லாம் அரிவாள் வெட்டுகளும், காயங்களும் இருந்துள்ளன.. இதைப்பார்த்து பதறிய அந்த பகுதி மக்கள் உடனடியாக இரணியல் போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.

போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். ஆனால், கிருஷ்ணதாஸை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? என்று தெரியவில்லை என்பதால் அது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.

இதற்குநடுவில், இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸின் அம்மா கிருஷ்ணகுமாரி (61) இரணியல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், கிருஷ்ணதாசின் மனைவி பவித்ராவுக்கும், ரமேஷூக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததால், இதை கிருஷ்ணதாஸ் தட்டி கேட்டிருக்கிறார். அந்த ஆத்திரத்தில் மனைவி கள்ளக்காதலனை ஏவி இந்த கொலையை செய்துவிட்டார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின்பேரிலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த கொலையில் பவித்ராவின் அம்மா முத்து லட்சுமிக்கும் (57) தொடர்பிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது..

இதையடுத்து பவித்ரா, அவரது அம்மா முத்துலெட்சுமி இருவரையுமே போலீசார் நேரில் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது முத்துலட்சுமி சொன்ன தகவல்களை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

முத்துலட்சுமி தன்னுடைய வாக்குமூலத்தில், "என்னுடைய வீடும், கிருஷ்ணதாஸ் வீடும் பக்கத்திலேயே உள்ளது. இதனால் என்னுடைய மகளை கிருஷ்ணதாஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கிருஷ்ணதாஸுக்கு மதுப்பழக்கம் உண்டு.

சில நாட்களுக்கு முன்பு போதையில் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த நான் இதுகுறித்து என்னுடைய மகள் பவித்ராவிடம் சொன்னேன். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பவித்ரா, இதுகுறித்து ரமேஷிடம் சொன்னார். அதன் பிறகுதான் ரமேஷ், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை பாழடைந்த மண்டபத்துக்கு அழைத்து சென்று வெட்டி கொன்றார்" என்று பகீர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா, மாமியார் முத்துலெட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்து தக்கலை ஜெயிலில் அடைத்தனர். ஆனால் ரமேஷ், விமல் இருவரும் இன்னமும் தலைமறைவாகவே உள்ளதால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+