கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் அனிதா.. நாகர்கோவில் வீட்டில் எந்த மகள்களும் காணக்கூடாத நிகழ்வு
நாகர்கோவில்: நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த மனோகரன் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அனிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் இருந்த நிலையை கண்டு உறவினர்கள் ஆடிப்போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த 47 வயதாகும் மனோகரன் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதாவுக்கு 42 வயது ஆகிறது.

அனிதா நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகள் மதுமிதா 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்புக்கு போக உள்ளார். இளைய மகள் தன்யா 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்புக்கு போக உள்ளார். கோடை விடுமுறை காரணமாக நேற்றுமுன்தினம் காலையில் அனிதாவின் மகள்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். இதனால் வருவாய் ஆய்வாளர் அனிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு வீட்டின் உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே தாயாரை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவே இல்லை.
சந்தேகமடைந்த மகள்கள், அக்கம் பக்கத்தில் உள்ள உறவினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு உறவினர்கள் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனிதா தூக்கில் தொங்கியிருந்தார். இதனை பார்த்து குழந்தைகளும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதனர். இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனிதாவுக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக விடுமுறையிலும் இருந்திருக்கிறாராம். இதற்கிடையே அனிதாவின் கணவர் சமீபத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
ஆனால் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, விடுமுறையை பாதியிலேயே ரத்து செய்து விட்டு பணிக்கு திரும்பினார். இதனிடையே அனிதா வேறு சில காரணங்களால் மனவேதனையில் இருந்தாராம். இதனால் அனிதா வீட்டில் உயிரை விட்டதாக கூறப்படுகிறது, வருவாய் ஆய்வாளர் அனிதா எடுத்த முடிவுக்கு என்ன காரணம் என்று, கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications