கன்னியாகுமரி நர்ஸ் பாத்ரூமில் எடுத்த ரிஸ்க்..கைக்கு தட்டுப்பட்ட "கால்".. வலி பொறுக்க முடியாமல்.. ஐயோ

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: யார் இந்த இளம் நர்ஸ்? என்ன நடந்தது? இப்போது இவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது..

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா.. நர்ஸிங் முடித்துள்ளார்.. 24 வயதாகிறது.. சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரு வருடமாக நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்..

Who is this Kanniyakumari Nurse Vinisha and what happened in Chennai T Nagar Hospital

வினிஷா, செல்வமணி என்பவரை காதலித்து வந்தார்.. செல்வமணி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. இப்போது சென்னையில்தான் இவரும் வேலை பார்த்து வருகிறார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷாவும், மதுரையை சேர்ந்த செல்வமணியும் சென்னையிலேயே வேலை பார்ப்பதால், 2 பேருமே கல்யாணம் செய்யாமலேயே நெருக்கமாகிவிட்டார்கள்.

இதன் விளைவு வினிஷா கர்ப்பமானார்.. தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.. இதனால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.. 7 மாதம் என்பதால், தன்னந்தனியே தடுமாறி வந்துள்ளார்... இந்நிலையில், நேற்றைய தினம் வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி வந்திருக்கிறது..

சுயமுயற்சி: தான் ஒரு நர்ஸ் என்பதால், தனக்குத்தானே சுயபிரசவம் பார்க்க முடிவு செய்தார்... இதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்... ஆனால், அவரால் முடியவில்லை..

எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் அவரால், பிரசவம் எளிதாக செய்து கொள்ள முடியவில்லை.. நேரம் ஆக ஆக, பிரசவ வலியும் அதிகரித்தது.. அந்த வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியாமல், பிரசவமும் எளிதில் முடியாமல், கடும் அவஸ்தைக்கு ஆளானார்..

சிசு கால்கள்: சிசுவின் கால் தட்டுப்பட்டுவிட்டால், ஒரேயடியாக வெளியே இழுத்துவிடலாம், அதற்கு பிறகு வலி குறைந்துவிடும் என்று நினைத்தார்.. இதற்காக கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்..

வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. தனித்தனியாக கால்கள் பிய்ந்துக்கொண்டு வந்தது.. அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது.. இதற்கு பிறகு, குழந்தையின் கால்களை அதே பாத்ரூமில் வீசிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஓடினார்..

நிலைமை மோசம்: அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. ஆனால், அதற்குள் வினிஷாவின் உடல்நிலையும் மோசமாகிவிட்டதால், அங்கேயே அவருக்கு தீவிர சிகிச்சையும் ஆரம்பமானது.. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், மாம்பலம் போலீசுக்கு தகவல் தந்தது.. போலீசாரும் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினிஷாவுக்கு இன்னும் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறதாம்.. ஆக, தீதும் நன்றும் பிறர் தரர் வாரா....!! வேறென்ன நாம் சொல்றது??

சமீப காலமாகவே, சுயபிரசவங்கள் அதிகரித்து வருகிறது.. சமீபத்தில்கூட கோவையில் புண்ணியவதி என்ற பெண் கர்ப்பமானார்.. ஆனால், தான் கர்ப்பமானது புண்ணியவதிக்கு பிடிக்கவில்லை... வேண்டா வெறுப்பாக குழந்தையை சுமந்து வந்தார்.. பிரசவ வலியின்போது, மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்தும்கூட, அவர் செல்லவில்லை.


வற்புறுத்தல்:
குடும்பத்தினர் வற்புறுத்தியதும் எரிச்சலடைந்த புண்ணியவதி, ரூமுக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.. சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதும் அவர் மருத்துவமனைக்கு செல்ல சம்மதிக்கவில்லை... தொப்புள் கொடியை சரியாக துண்டிக்காமல், குழந்தையின் வயிற்றுடன் சேர்த்து துண்டித்துவிட்டார் புண்ணியவதி..

இதனால் குழந்தை வலியால் அலறி துடித்தது.. குழந்தையின் கதறலை பார்த்து, நிலைமை விபரீதமாவதை உணர்ந்த குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு, குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.. ஆனால், உலகத்தை கண்திறந்து பார்க்கும்முன்பே அந்த குழந்தை இறந்துவிட்டது.

விழிப்புணர்வு: இதோ, இப்போதும் படித்த பெண், அதுவும் நர்ஸுக்கு படித்த பெண், சுயபிரசவம் பார்த்துள்ளதும், தன் குழந்தையின் கால்களை துண்டித்து கொன்றுள்ளதும் அதிர்ச்சியை தந்துள்ளது.. சுயபிரசவங்களில் ஏற்படும் அபாயங்களையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் குறித்த விழிப்புணர்களை தமிழக அரசு இன்னும் அதிகமாக மேற்கொண்டால், நம் மக்களுக்கு உதவியாக இருக்கும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+