பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த பெண்.. சர்ரென வந்த கார்! பள்ளி தோழனை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுடன் பள்ளியில் படித்த நபரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான ஒரு துணிக்கடையில் அவர் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வீட்டுக்கு செல்வதற்காக குழித்துறை பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கி இருக்கிறார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் அந்த பெண்ணுடன் படித்த நபர் வந்திருக்கிறார்.

kanyakumari crime police

அந்த பெண்ணின் வீட்டு வழியாக தான் செல்வதாகவும் காரில் அமருமாறும் கூறியுள்ளார். தன் உடன் படித்தவர் தானே என அந்த பெண்ணும் நம்பி காரில் ஏறி இருக்கிறார். சிறிது நேரம் சென்று நிலையில் பெண்ணின் வீட்டுக்கு போகாமல் தனது வீட்டுக்கு அந்த நபர் காரை திருப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது தனது வீட்டுக்கு வந்து மனைவி குழந்தைகளை சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

காரில் இருந்து வீட்டுக்குள் சென்ற பிறகுதான் வீட்டில் யாருமே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த இளைஞர் வீட்டில் கதவை தாழிட்டு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் குழந்தைகளையும் உன்னையும் கொலை செய்து விடுவேன், உன் கணவர் மீது கார் ஏற்றி கொல்வேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து இதனை கவனித்த அந்த பெண்ணின் கணவர் நடந்தது குறித்து கேட்டபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை இளைஞரின் வீட்டுக்கு அனுப்பி நடந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற போது இளைஞர், அவரது மனைவி, தாய், அக்கா ஆகியோர் இருந்திருக்கின்றனர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விவரித்த போது அந்த இளைஞரின் சகோதரி பெண்ணை சரமாரியாக தாக்கி இருக்கிறார். மேலும் அந்த இளைஞரும் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தப்பி அந்த பெண் இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் படித்தவரை நம்பி காரில் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+