கர்ப்பம்.. பெட்ரூம் கதவை சாத்திவிட்டு இரவெல்லாம் அழுத ஷிவானி.. அடுத்தடுத்து நடந்த பகீர்.. குமரி ஷாக்
குமரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
கன்னியாகுமரி: கதவை சாத்திக்கொண்டு அழுது கொண்டே இருந்த ஷிவானி, டக்கென அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.. இப்போது விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்துள்ளது பெருமாள்புரம்.. இங்கு வசித்து வந்தவர் ஷிவானி.. 22 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் நாகராஜன். அவருக்கு 28 வயதாகிறது..
சாமிதோப்பு மேலைத்தேர்வைக் சேர்ந்தவர்.. நாகராஜன் நாகர்கோவிலில் ஆயுதப்படை போலீசாக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.

தகராறு
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு இரவு, தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. ஷிவானி செய்த சாப்பாடு நாகராஜுக்கு பிடிக்கவில்லையாம்.. இதனால் சண்டை போட்ட நாகராஜ், சிறிது நேரத்தில் நைட் டியூட்டிக்கும் கிளம்பி சென்றுவிட்டார். பிறகு தன் ரூம் கதவை அடைத்துவிட்டு, அன்று இரவெல்லாம் ஷிவானி அழுது கொண்டே இருந்தார்..

பெற்றோர்
ரொம்ப நேரமாகியும் ஷிவானி தன்னுடைய ரூமை விட்டு வராததால், சந்தேகமடைந்த நாகராஜ் குடும்பம் உடனடியாக ஷிவானியின் பெற்றோருக்கு தகவல் தந்தனர்.. இதனால் பதறி போய் வந்த ஷிவானியின் பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால், ஷிவானி தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.. இதை கண்டு அலறிய ஷிவானியின் பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர்..

அதிர்ச்சி
ஆனால், ஷிவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இதையடுத்து அதிர்ந்து போன பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தென் தாமரைக்குளம் போலீசாருக்கு புகார் தந்தனர்.. அந்த புகாரில், "என் மகளுக்கும், நாகராஜனுக்கும் 2019, அக்டோபர் 24ம் தேதி கல்யாணம் ஆனது.. 95 சவரன் நகை போட்டு, 5 லட்சம் ரூபாய் ரொக்கம் தந்து கல்யாணம் செய்தோம். 6 மாசத்துக்கு முன்பு ஷிவானி கர்ப்பம் அடைந்தார்...

கர்ப்பம்
ஆனால், திடீரென்று கரு கலைந்து விட்டது... அதற்கு என் மகள்தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் குற்றம் சாட்டி பேசி, கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான் எங்கள் மகள் இறந்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. இதில் ஆர்டிஓ விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications