ஆற்றில் குளித்த பெண்களை.. நூதன முறையில் கேமரா வைத்து படம் பிடித்து சிக்கிய.. திருட்டு வெங்கடேசன்
Recommended Video
கன்னியாகுமரி: ஆற்றில் பெண்கள் குளிப்பதை... ஒருவர் கேமிராவில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதுவும் அந்த யாருக்குமே சந்தேகம் வராத மாதிரி, தனது பைக்கில் டெக்னிக்காக கேமிராவை மறைத்து வைத்து இந்த குளியல் வீடியோவை எடுத்துள்ளான் அந்த அயோக்கியன்.
பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள ஆறுகளில் பெண்கள் இப்படி குளிப்பது சாதாரண ஒன்றுதான். பெண்கள் குளிப்பது தெரிந்தால், அந்த பக்கம் ஆண்களும் போவதை தவிர்த்து கொள்வார்கள்.
இப்படித்தான், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஆற்றில் நீர் வரத்து உள்ளதால், அந்த பகுதி பெண்கள் இறங்கி குளித்து வருகின்றனர்.

பைக்
ஆனால் ஆற்றின் படித்துறை சில நாட்களாவே ஒரு பைக் நின்று கொண்டிருப்பதை குளிக்கும்போது பெண்கள் கவனித்துள்ளனர். பைக்குக்கு கொஞ்ச தூரம் தள்ளி ஒரு இளைஞரும் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அவர் யார் என்பதும், எதற்கு இப்படி பைக்கில் வந்து நிற்கிறார் என்பதும் பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அந்த இளைஞர் வந்து நிற்பதை பெரிதாக இவர்கள் எடுத்து கொள்ளவில்லை.

ஆற்றங்கரை
ஆனால் தினமும், குளிக்கிற சமயத்தில் இளைஞர் பைக்குடன் வந்துவிடவும், அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த இளைஞரோ, சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ பேசினார். பிறகு அவசர அவசரமாக பைக்கை எடுத்து கொண்டு கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்.

ரெக்கார்டிங்
அப்போதுதான், அவரது பைக்கின் ஹேண்டில் பாரில் (கைப்பிடி) கருப்பு கலரில் ஒரு பெட்டி இருந்ததை பெண்கள் கவனித்துள்ளனர். பெட்டியைத் திறந்து பார்த்தபோது, ரெட் கலர் லைட் எரிந்து கொண்டெ இருந்தது. அதாவது ஒரு ஸ்மார்ட் போனில், வீடியோ ரெக்கார்டிங் போய்க் கொண்டிருந்தது. அதை ஆன் செய்து பார்த்தபோது, இவ்வளவு நாள் ஆற்றில் குளித்த பெண்களின் வீடியோ பதிவாகி இருந்தது.

ஆபாச வீடியோ
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பெண்கள், உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசாரு விசாரித்ததில், பெயர் வெங்கடேசன் என்பதும், செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வயசு 24 ஆகிறதாம். எப்பவுமே ஆற்றில் குளிக்கும் பெண்களை இப்படி ஆபாசமாக வீடியோ எடுப்பதுதான் அவனது ஆசையாம்.

கைது
இதற்காகவே அந்த கருப்பு கலர் பெட்டியை டிசைன் செய்துள்ளார். ஸ்மார்ட் போனை வீடியோ மோடில் ஆன் செய்துவிட்டு.. அதை இந்த கருப்பு பெட்டிக்குள் வைத்து.. கருப்பு பெட்டியை ஹாண்டில் பாரில் பிக்ஸ் செய்துவிட்டு.. ஆற்றங்கரை பக்கம் போய் எதுவுமே தெரியாமல் ஒரு ஓரமாக போய் நின்று கொள்வாராம். இப்படி ஏகப்பட்ட குளியல் வீடியோக்களை அந்த செல்போனில் படம் பிடித்துள்ளார். இப்போது வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications