6 குறும்படங்களை இணைத்து ஒரு புதிய படம்... கார்த்திக் சுப்புராஜின் புது முயற்சி
Subscribe to Oneindia Tamil
6 குறும்படங்களை இணைத்து பெஞ்சு டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார்.
இந்த 6 குறும்படங்களில் ஐந்தை வெவ்வேறு இயக்குநர்கள் இயக்க, நீர் என்ற படத்தை மட்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மற்ற படங்களை அனில் கிருஷ்ணன், கோபகுமார். சாருகேஷ் சேகர், மோனிஷ், ரத்தன்குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
குறும்படங்களை தியேட்டர்களிலும் வெளியிடும் முயற்சியாக இந்தப் பெஞ்சு டாக்கீஸை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார்.
நாளை இந்தப் படங்களை சென்னை சத்யம், பிவிஆர் மற்றும் கோவையில் இரு அரங்குகளில் பரீட்சார்த்தமாக வெளியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications