2026 இல் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராவார் செந்தில் பாலாஜி.. என்ன இப்படி சொல்றாரே அதிமுக மாஜி!

Subscribe to Oneindia Tamil

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் பாஜகவில் இணைவார் என கரூரில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் நடத்துநர், ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 AIADMK Ex Minister says that Senthil Balaji will join in BJP

இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என்றும் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஓரிரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கு விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுகவில் அதிகாரமிக்க அமைச்சராக வலம் வருகிறார் செந்தில் பாலாஜி.

இவர் மீது உச்சநீதிமன்றத்தில் மோசடி வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடித்தால் நியாயமான விசாரணை நடக்காது. அவர் பதவி விலக வேண்டும். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் முதல்வர் அவரது அமைச்சர் பதவியை ரத்து செய்ய மாட்டார்.

செந்தில் பாலாஜி பதவி விலக வில்லை எனில் அதிமுக தலைமையிடம் பேசி போராட்டம் நடத்தப்படும். இவ்வளவு ஏன் செந்தில் பாலாஜி தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள டெல்லியில் சென்று பாஜகவில் கூட இணைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் அண்ணாமலையை பின்னுக்கு தள்ளிவிட்டு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி கேட்டாலும் கேட்பார். ஓபிஎஸ் பழைய ரூ 2000 நோட்டு அல்ல. தற்போதைய செல்லாத ரூ 2000 நோட்டு. இவ்வாறு சின்னசாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+