விஏஓ கொலை பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் லீடர் கைது! போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த கட்சியினரால் பரபரப்பு!
கரூர் : திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ஆம் தேதி அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆற்று மணல் கொள்ளையர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் அவரை வெட்டிக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணியில் இருந்த விஏஓ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், விஏஓ கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவரான நவலடி கார்த்திக் (35), தமிழ்நாடு அரசு, முதல்வர் ஸ்டாலின், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கரூர் நகர போலீசார் அதிமுக ஐடி விங் நிர்வாகி கார்த்திக்கை இன்று நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த அதிமுகவினர் கரூர் நகர காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு பிறகு போலீசார் கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications