செந்தில் பாலாஜியின் ஆட்டம் ஆரம்பம்..கரூரில் அதிமுக முக்கிய பிரபலத்தை சத்தமே இல்லாமல் திமுகவில் இணைத்தார்
கரூர்: தமிழக அரசியலில் கோவை முதல் கரூர் வரை உள்ள கொங்கு மண்டலம் எப்போதும் ஒரு அதிகார மையமாகவே இருக்கிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் திமுக - அதிமுக இடையேயான அரசியல் மோதல் எப்போதும் அனல் பறக்கும். ஏனெனில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் இடையேயான மோதல் பிரசித்தி பெற்றது. இந்த சூழலில் கரூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்கிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் திமுகவை பொறுத்தவரை செந்தில் பாலாஜி பெரிய ஆளுமையாக இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் வலுவான திமுக தலைவராக இருக்கிறார். அதேபோல் கரூரில் அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஒரு வலுவான ஆளுமையாகத் திகழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக அரசியல் மோதல்கள் உள்ளன. இதில் நிர்வாகிகளை கவர்ந்து இழுப்பதில் போட்டி ஏற்படும். இந்த சூழலில் நீண்டகாலமாக அரசியலில் இருந்த அதிமுகவின் MDA துரைமுருகன் தற்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது, மாவட்டத்தில் அதிமுகவின் அடிமட்டக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்..

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்
ஏனெனில் நேற்று கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன் தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தார். அடுத்த சில நாட்களில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக இன்னும் பல ஆதரவாளர்களைத் திரட்டி, ஒரு பிரம்மாண்டமான இணைவு விழாவை நடத்தப்போவதாக எம்டிஏ துரைமுருகன் அறிவித்துள்ளார். இது கரூர் மாவட்ட அதிமுக தலைமைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவின் திட்டம்
கரூர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்திலேயே (கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல்) தற்போது கட்சித் தாவல் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்லா பக்கமும் வென்ற திமுக, கொங்கு மண்டலத்தில் சற்றே சறுக்கிவிட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.. இந்த முறை அங்குள்ள அதிமுகவின் முக்கியத் தூண்களைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் அந்த மண்டலத்தை முழுமையாகத் தன்வசப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.
செந்தில் பாலாஜியின் வியூகம்
அதிருப்தி நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறதாம். இந்நிலையில் தான் கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன் தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்திருக்கிறார். மேலும், அடுத்த சில நாள்களில் கரூரில் Ex அமைச்சர் MR விஜயபாஸ்கருக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் பலரை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜியின் அரசியல் வியூகம் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்
இணைப்பு விழாக்கள்
தேர்தல் நெருங்கும் வேளையில், கொங்கு மண்டலத்தின் அரசியல் களம் ஒரு 'செஸ்' விளையாட்டைப் போல மாறியிருக்கிறது. கரூரில் தொடங்கியுள்ள இந்த 'இணைப்பு விழாக்கள்', வரும் நாட்களில் கொங்கு மண்டலத்தின் மற்ற மாவட்டங்களிலும் அதிக அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!












Click it and Unblock the Notifications