நான் சொன்னது போலவே அமமுக கூடாரம் கலகலக்கிறது.. அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மகிழ்ச்சி
Recommended Video

கரூர்: தான் சொன்னது போல், அமமுக கூடாரம் காலியாகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து, டிடிவி தினகரனின் அமமுகவில் இருப்பவர்கள் மீண்டும் தாய் கழகத்துக்கு வரலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து விடுத்து வந்த அழைப்புக்கு தற்போது கூடுதல் பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.

அதன் முக்கிய அம்சமாக, கரூரில் உள்ள அமமுகவினர், அக்கட்சியில் இருந்து பிரிந்து தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பல நாட்களாக அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வந்த இணைப்பு நிகழ்ச்சிகள் தற்போது கனஜோராக நடக்க ஆரம்பித்துள்ளன.
அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாகிறார் என்ற செய்திகள் வலம் வரத் தொடங்கியவுடன், கரூரில் உள்ள அமமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் கரூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட அமமுகவின் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். வேறு கட்சிகளுக்கு செல்ல உடன்பாடில்லை என்பதால் தாய் கழகத்துக்கே திரும்பி வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இணைப்பு நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர் விஜய பாஸ்கர், அமமுக கூடாரம் காலியாகி வருகிறது என்றார். விரைவில் அந்த கட்சியில் உள்ள அனைவரும் தாய்க்கழகமாக அதிமுகவில் இணைவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications