"நம்பர் ஒன்" முதல்வர் ஸ்டாலின்.. எதில் எல்லாம் தெரியுமா? லிஸ்ட் போட்டு அட்டாக் செய்த அண்ணாமலை!
கரூர்: இன்றைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நான் தான் நம்பர் ஒன் என்று அவருக்கு அவரே சொல்லி வருகிறார். அது உண்மை தான்.. ஆனால் எதில் மு.க ஸ்டாலின் நம்பர் ஒன் என்பதை லிஸ்ட் போட்டு அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக சார்பில் கரூரில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்தும் கரூரில் மாற்றத்திற்கான மாநாடு நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- கரூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களும் போற்றக்கூடிய உத்தம தலைவராக உருவெடுத்திருக்கிறார். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பிரதமர் மோடியை தான் நம்பர் ஒன் பிரதமர் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கியுள்ளார்.

இன்றைய மார்னிங் கன்சல்ட் நடத்திய சர்வேயில் பிரதமர் மோடி அவர்களின் அப்ரூவல் ரேட்டிங் 78. உலகத்தில் மிக அதிகமாக 100 பேரில் 78 பேருக்கு என்னுடைய பிரதமர் எனக்கு பிடிக்கும் என்று சொல்லக்கூடிய முழு தகுதி நம்முடைய பிரதமர் மோடிக்கு உள்ளது. அதனால் தான் உலகத்தில் நம்பர் ஒன் பிரதமர் என்ற பெயரை நமது பிரதமர் மோடி எடுத்திருக்கிறார். இன்றைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நான் தான் நம்பர் ஒன் என்று அவருக்கு அவரே சொல்லி வருகிறார்.
சர்வே கிடையாது, 78 என்ற புள்ளி கிடையாது.. வெளிநாட்டில் விருது கிடையாது.. வெளிநாட்டில் உள்ள பிரதமர்கள் சொல்லவில்லை.. இவரே சொல்லிக்கொள்கிறார்.. இவரது அமைச்சர்கள் சொல்கிறார்கள்.. அப்படி சொன்னால் தானே அவர்களை பதவியில் வைத்துக்கொள்வார்கள்.. முதல்வர் மு.க ஸ்டாலின் நம்பர் ஒன் தான்.. எதில் என்றால்.. மணல் கடத்தலில் இந்தியாவிலே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது மு.க ஸ்டாலின் தான்.. சாராய வியாபாரத்திலே இந்தியாவிலே நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான்..
14 ஆண்டுகள் கள்ளச்சாராய மரணம் இல்லாத தமிழகத்தில 22 பெண்களின் தாலியை அறுத்ததற்காக முதல்வர் மு. க ஸ்டாலின் நம்பர் ஒன்.. இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு என்ற பெருமையை தேடி கொடுத்ததற்காக நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ஏமாந்து போனதற்காக நம்பர் ஒன் முதலமைச்சராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். நாச்சியப்பன் கடையில் வாங்கிய பாத்திரத்திற்கும் உலக கோப்பைக்கும் வித்தியாசம் தெரியாத முதல்வர் முக ஸ்டாலின்.. வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதில் மு.க ஸ்டாலின் நம்பர் ஒன். இவ்வாறு அவர் கூறினார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications