கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை திடீர் சந்திப்பு.. என்ன நடந்தது?
கரூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக விலகிய போதும், டிடிவி தினகரனை நேரில் சென்று அண்ணாமலை சந்தித்திருந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அப்போது அமமுக மற்றும் ஒபிஎஸ் ஆகியோரும் என்டிஏ கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு படி மேல் சென்று, எடப்பாடி பழனிசாமிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று அறிவித்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அறிவித்தனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக எதிர்த்து வருகிறார் டிடிவி தினகரன். அதிமுகவையே எடப்பாடி திமுக என்று விமர்சிக்க தொடங்கினார். அதேபோல் விஜய் பக்கம் சாய்வது போலவும் டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனிடையே சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை தனி அணியாக உருவாக்கி என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகளை தமாகா தலைவர் ஜிகே வாசன் மூலமாக டெல்லி பாஜக தலைமை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி, உள் ஒதுக்கீடாக அமமுக, ஒபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு தொகுதிகள் ஒதுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அப்போது இருவரும் சில நிமிடங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறிய போது டிடிவி தினகரனை நேரில் சென்று அண்ணாமலை சந்தித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் சில ஆண்டுகளாகவே நட்பு தொடர்ந்து வரும் நிலையில், அமமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications