ஜோசப் விஜய் முதுகில் குத்துவார்கள்.. சோனியா காந்தியை வைத்தே முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கரூர்: திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், இப்போது முதல்வர் விஜய்க்கே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு முதல்வர் நேரில் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக வரும் 22-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தவெக கூட்டணி, கரூர் கார் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ் என்பவரின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் எரித்த சம்பவம் தொடர்பாக பார்வையிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் வருகை தந்திருந்தார்.

Arjun Sampath Joseph Vijay Congress Alliance

இந்து மக்கள் கட்சி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "இந்து மக்கள் கட்சி நிர்வாகி சுரேஷ் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து 8 நாட்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. தீ வைப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விபத்தா, சதித்திட்டமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

வரும் 24ந் தேதி அன்று கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதியும், பாதுகாப்பும் அளித்தும், திமுக அரசு 144 தடை உத்தரவு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் திமுக அரசு போன்று செயல்பட்டு வருகிறது.

அர்ஜுன் சம்பத் பேட்டி

சூரசம்ஹாரம் நிகழ்வின்போது முருக பக்தர்களின் மனது புண்படும்படியாக பாடகர்கள் அரோகரா கோஷம் எழுப்பியது முருகனுக்கு பாவம் செய்வது போன்றது.

திருப்பரங்குன்றம் என்பது முருகர் மலை, சிக்கந்தர் அலை அல்ல, அங்குள்ள தர்காவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்துக்கள் தான் அதிகம் வழிபடுகிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரம்

சு.வெங்கடேசன், வஞ்சிநாதன் ஆகியோர் கேரளாவில் இருந்து எஸ்டிபிஐ அமைப்பினரை வரவழைத்து தூண்டிவிட்டனர். அவர்களால்தான் திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க முயற்சி நடந்தது. இந்த கலவரத்தை அதிகப்படுத்தியதும் அவர்கள்தான். இப்போது சு. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் தீபத் தூணில் தீபம் ஏற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் நீதிமன்றத்தை அவமதித்து வருகின்றனர்.

மத நல்லிணக்க கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்தி மதுரையில் மதக் கலவரத்தைத் தூண்டுகின்றனர். அறநிலையத்துறை நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அமைச்சர் நிர்மல் குமார் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். கடந்த ஆண்டு 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி முருக பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் பூர்ணசந்திரன்தான் காரணம். இப்போதும் அதேபோன்ற சூழலை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

தவெகவை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாக வழிநடத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் முதல்வரே அங்கு நேரடியாக வந்து தீபம் ஏற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 22ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சோனியா புத்தக வெளியீட்டு விழா

டெல்லியில் சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் குழந்தை போல் நடந்து கொள்கிறார். அந்த புத்தகத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது, திரிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் பிரதமரான பிறகு தான் சோனியா காந்தி குடியுரிமை பெற்றார். ராகுல் காந்தி இத்தாலி கம்யூனிட்டுகளை அழைத்து வந்து இந்தியாவிற்கு எதிராக பேச வைக்கிறார், ரசிக்கிறார். சோனியா புத்தகத்தை சீக்கியர்கள் எதிர்க்கிறார்கள். இலங்கை முள்ளி வாய்க்கால் சம்பவத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை எரித்தார்கள், அதற்கு காங்கிரஸ் உடந்தையாக இருந்ததால் தமிழர்களும் எதிர்க்கிறார்கள். தேச விரோதிகளின் கைப்பாவையாக ராகுல் காந்தி இருக்கிறார், அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவுக்கு ஜால்ரா

நூலகங்களுக்கு புத்தகம் வாங்கிய குழுவில் கம்யூனிஸ்ட்டுகள் திகவினர் தான் இருந்தார்கள். இந்தியாவுக்கும், மோடிக்கும், இந்துக்களுக்கு எதிரான புத்தகங்களை வாங்கி செயல்பட்டார்கள். ஊழல் செய்த நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

திமுகவிற்கு ஜால்ரா போட்ட விடுதலை சிறுத்தைகள், கம்யூனிட்டு கட்சிகள், தற்போது தவெகவிற்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை கவிழ்க்க கூட்டணி கட்சியினர் முயல்வதால் முதல்வர் தீவிரமாக கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி எடுத்து வருகிறது. அங்குள்ள காங்கிரஸ் கமிட்டியை அழைத்து தலைமை எச்சரிக்க கூடாதா? தவெக மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.

முதுகில் குத்தும் காங்கிரஸ்

முதலமைச்சர் விஜய் சோனியா காந்தியினுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்று முன் வரிசையில் அமர்ந்துவிட்டார். இது அவருக்கு செய்யப்படக்கூடிய சிறப்பல்ல. காங்கிரஸ் எப்பொழுது வேண்டுமானாலும் முதுகிலே குத்தும். அதற்கு திமுக-வே உதாரணம். நாளைக்கு நிச்சயமாக ஜோசப் விஜய்யுடைய முதுகிலே குத்துவார்கள்.. எப்பொழுதுமே காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடிய கட்சி, கூட்டணிக் கட்சிகளை அழிக்கக்கூடிய கட்சி.

முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கே செல்லும்போது என்ன செய்திருக்க வேண்டும்? சோனியாவிடம் கேளுங்கள், டி.கே. சிவகுமார் இருக்கிறார் அவரிடம் கேளுங்கள். காவிரியில் நம்முடைய தமிழக உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலே மேகேதாட்டுவிலே அணை கட்டக்கூடிய முயற்சியை அவர்கள் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் சோனியாவிடம் சொல்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூலமாக அந்தக் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு உத்தரவு இட சொல்லுங்கள். தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜோசப் விஜய் மேற்கொள்ள வேண்டும்.

மிஷினரி மாடல் ஆட்சி

திராவிட மாடல் தீயசக்தி ஆட்சியிலே சட்டசபையிலேயே ஜெயலலிதா அம்மையாரின் சேலையைப் பிடித்து இழுத்தார்கள். இங்கே இவர்கள் இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறார்கள்; இப்போதே ஆபாச மெசேஜ்களை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்கள். அதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் முதலமைச்சரும் கருத்து சொல்லவில்லை, தமிழக வெற்றிக் கழகமும் கருத்து சொல்லவில்லை.

அதுமட்டுமல்லாமல் மெத்தம்பெட்டமைன் விவகாரத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் அயலக அணியினர் கடத்தினார்கள், இப்போது இவர்களுடைய கட்சிக்காரர்கள் மெத்தம்பெட்டமைன் கடத்துகிறார்கள். அந்தக் காலத்தில் திமுக உட்கட்சி விவகாரத்தில் அவர்களுடைய கட்சிக்காரர்களே தா. கிருஷ்ணனைக் கொன்றார்கள்; இவர்கள் இப்போது துணை சபாநாயகரையே சென்று அடிக்கிறார்கள்.

அதனால் இந்தத் திராவிட மாடல் தீயசக்திக்கும் இந்த மிஷனரி மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தத் திராவிட மாடல், மிஷனரி மாடலுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+