கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி பண்ணினா எப்படி?... சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யல... கரூர் காங்., வேட்பாளர் புகார்

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதனையடுத்து, வாக்கு எண்ணிகை மே 23-ம் தேதி நடைபெற இருப்பதால், எல்லா தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைத்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

CCTV cameras not working, Karur congress Candidate Jothimani complained

அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடமான, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற ஜோதிமணியின் புகாரை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் மாவட்ட எஸ்.பி. ராஜசேகர் ஆய்வு செய்தார்.

தலைவர்களை தேடாதீர்கள்... மக்களே நீங்கள் தான் தலைவர்கள்... கமல்ஹாசன் பிரச்சாரம் தலைவர்களை தேடாதீர்கள்... மக்களே நீங்கள் தான் தலைவர்கள்... கமல்ஹாசன் பிரச்சாரம்

முன்னதாக, தகுந்த போலீஸ் பாதுகாப்பில்லை. கரூர் மாவட்டக் கலெக்டரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் இருவரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karur Constituency Vote Counter's cctv cameras Not Working Congress Candidate Jothimani complained
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X