கரூர் அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க ஸ்டாலின் உத்தரவு.. விரைந்த கலெக்டர், அமைச்சர்கள்
கரூர்: நடிகர் விஜய்யை பார்க்க பலரும் வந்த நிலையில் மிகப்பெரிய கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அமராவதி தனியார் மருத்துவமனைகள் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது, கரூரிலுள்ள மேலும் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 50பேர் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. சம்பவ இடத்திற்கு திருச்சி மத்திய மண்டல தலைவர் நிர்மல் குமார் ஜோஷி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறார்.
இதனிடையே கரூர் அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகளை தயார் நிலையில் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரைந்துள்ளனர். மிகவும் பதற்றமான நிலை கரூரில் ஏற்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் அழுகை குரல்களை காண முடிகிறது. மக்கள் காயத்துடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குவிந்துள்ளனர். இதேபோல் மருத்துவனைகளை நோக்கி ஆம்புலன்சுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் சம்பவ இடத்தில் குவிந்து உதவிகளை செய்து வருகிறார்கள். கூட்ட நெரிசலுக்கு ஒரே நேரத்தில் பலர் முண்டியடித்து சென்றது காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்தில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்கள். 29 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications