மாற்று, மாறுதல் என சொன்னவங்க தான் மறைந்து போனார்கள்.. பாஜகவுக்கு எப்போதும் நோ என்ட்ரி தான்! ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கரூர்: மாற்று, மாறுதல் என சொன்னவர்கள் தான் மறைந்து போய்விட்டார்கள் என்றும் ஆனால் திமுக மறையவில்லை என்றும் கரூர் திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசினார். மேலும் அந்நாளும் சரி.. இந்நாளும் சரி.. எந்நாளும் சரி.. அடக்கு முறைக்கு இங்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரி தான்.. பாஜகவுக்கு நோ எண்ட்ரி தான் என பேசினார்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை துணிச்சலோடு நேருக்கு நேர் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்.. தொகுதி மறுவரையறை என்று சொன்னதும் அதனை எதிர்த்து நிற்கிறோம்.. கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால் அதனை சட்ட ரீதியாக எதிர்த்து நிற்கிறோம்.. முக்கியமாக மாநிலங்கள் தான் வலிமையான நாட்டிற்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறோம்.

dmk-mupperum-vizha-karur-those-who-spoke-of-change-have-disappeared-only-dmk-stands-strong-stali

மத்திய அரசு இல்லை.. ஒன்றிய அரசு என்று அழுத்தி சொல்கிறோம். இப்படி போராடி போராடி தமிழர்களின் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்கிறோம்.. இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய வைக்க மாட்டோம்.. இதனால் தான் சொல்கிறோம் அண்ணாவின் கொள்கை பட்டாளமே, தலைவர் கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே..

தனி நபர்கள் தோன்றுவார்கள்.. மறைவார்கள்..

தனி நபர்கள் தோன்றுவார்கள்.. மறைவார்கள்.. கட்சிகள் வரும் போகும். ஆனால் தமிழர்களின் தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது. நம் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்.. இந்த தமிழ் மண் தான் எல்லாத்தையும் கொடுத்துச்சு.. இந்த மண்ணை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு தான் இருக்கிறது.

பாஜகவுக்கு நோ என்ட்ரி தான்..

டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துறாங்க.. ஒன்றா இரண்டா.. இந்தி மொழியை திணிக்கிறாங்க.. நீட் தேர்வு விலக்கு அளிக்க மறுக்கிறார்கள்.. கல்வி நிதியை தர மறுக்கிறார்கள்.. கீழடியின் தொன்மையை மறைக்கிறாங்க.. வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்று சொல்லி நம் ஓட்டுரிமையை பறிக்கிறார்கள். ஆனால் அந்நாளும் சரி.. இந்நாளும் சரி.. எந்நாளும் சரி.. அடக்கு முறைக்கு இங்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ எண்ட்ரி தான்..

திணிப்புக்கு இங்கே நோ எண்ட்ரி தான்.. மொத்தத்துக்கு பாஜகவுக்கு இங்கே நோ எண்ட்ரி தான்.. இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.. மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தோம்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எதுவும் செய்ய முடியவில்லையே.. முப்பெரும் விழாவை இப்போது பார்த்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு சொல்கிறேன்..

ஜெயிலுக்கு போனேன்

எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்து பெற்று தந்த உரிமைகளை எல்லாம் நம் கண் முன்னே பறிபோவதை பார்த்துக்கொண்டு இருப்போமா.. அனுமதிக்கலாமா.. பாஜகவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து மாநிலங்களே இருக்கக்கூடாது என்று தான் நகர்வார்கள்.. நாம் இதனை செய்யவில்லை என்றால் நம் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்.. இதற்கு போராடவில்லை என்றால் வேறு எதற்கு போராடுவோம்.. 23 வயசுல எமெர்ஜென்சியை எதிர்த்து ஜெயிலுக்கு போன இந்த ஸ்டாலின் உங்க எல்லாருக்காகவும் தொடர்ந்து உழைப்பேன்.

திமுகவுக்கு மாற்று என்று சொல்கிறார்கள்

இப்போதும் சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்க தான் திமுகவுக்கு மாற்று என்று.. என்ன மாற்றப்போறாங்க.. தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கியாக இழுத்து செல்லப்போகிறார்கள்.. மாற்றம் மாற்றம் என்று அவர்கள் தான் மாறிப்போனார்கள்.. நாம் எவ்வளவோ நெருக்கடியில் ஆட்சி பொறுப்பை ஏற்றோம். ஒரு பக்கம் நிதி நெருக்கடி, மறுபுறம் கொரோனா என பெரும் நெருக்கடியில் ஆட்சி பொறுப்பு ஏற்று.. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தினை மாற்றியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். சில பேர் இப்போது பேசுகிறார்கள் நாங்கள் தான் திமுகவுக்கு மாற்று என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+