கரூர் பஸ் ஸ்டாண்டில் எகிறிய சேலம் சுமதி.. "டாஸ்மாக்கை மூடுங்க.. ரூமுக்கு வர்றியானு கேட்கிறானே? பரபர

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த பெண்ணை நினைவிருக்கிறதா? இந்த சம்பவம் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் பெண், 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லிலிருந்து, சேலம் செல்வதற்காக கரூர் பஸ் ஸ்டாண்டில் வந்து காத்திருந்தார். அப்போது போதை நபர் ஒருவர், சுமதியிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக தெரிகிறது.

Karur CCTV Camera

சுமதி: சுமதியின் கையை பிடித்து இழுத்து, அந்த போதை நபர் அசிங்கமாக பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி, அந்த நபரை எட்டி உதைத்திருக்கிறார்.. அந்த போதை இளைஞரை உதைத்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

ஆனால் அப்போதும் யாருமே சுமதிக்கு உதவிக்கு வரவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, அவசர எண் 100-க்கு போன் போட்டுள்ளார். ஆனால், இணைப்பும் கிடைக்கவில்லையாம். அந்த ஏரியாவில் போலீஸ் ஜீப் எதுவுமே கண்ணில் படவில்லையாம்... பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திலும் போலீஸார் யாரும் இல்லையாம்.

எனவே, ஒரு மணி நேரம் காத்திருந்து, போலீஸ்காரர்கள் அங்கு வந்ததுமே அவர்களிடம் சுமதி முறையிட்டிருக்கிறார்.. இவ்வளவு பெரிய பஸ் ஸ்டாண்டில், போலீஸ்காரர் ஒருத்தருமே இல்லையே ஏன்? பெண்ணுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாதா? குடிபோதையில் அட்டகாசம் செய்பவர்களை கேட்க யாருமேயில்லையா? இப்படியிருந்தால் எதிர்காலமே நாசமாக போய்விடும்.

ரூம் போடறேன்: ரூம் போடுறேன் வர்றியான்னு ஒருத்தன் கேட்கிறானே? பெண்களிடம் கலாட்டா செய்றவங்களை யார் தட்டிக்கேட்பது? இப்படி கலாட்டா செய்றதுக்குதான் டாஸ்மாக்கை திறந்து வெச்சிருக்கீங்களா? நீங்க சம்பாதிக்கிறதுக்காக எங்களை சாகடிப்பீங்களா? தமிழ்நாட்டில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு" என்றெல்லாம் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சுமதி. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.. கடந்த 14ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.. பஸ் ஸ்டாண்டில் போதை இளைஞர் தன்னிடம் அசிங்கமாக நடக்க முயன்றதால், உடனடியாக சுமதி தன்னுடைய உறவினர் என்று கூறப்படும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமிக்கு தகவல் அளித்திருக்கிறார்.. இதையடுத்து அவர் தன்னுடைய வழக்கறிஞருடன் பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பி வந்துள்ளார். அப்போதுதான் போலீஸாரும் அங்கு வந்திருக்கிறார்கள்.

கொதிப்பில் சுமதி: போலீஸாரை பார்த்ததுமே கொதிப்படைந்தபோதுதான் சுமதி அடுக்கக்கான குற்றச்சாட்டுகளை சொன்னார்.. பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையின் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தில்கூட போலீஸாரே இல்லை என்றும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாலும், அவர் செல்போனை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

அதுமட்டுமல்ல, காவல் துறையில் போலீஸார் பற்றாக்குறை உள்ளது.. அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதால், குடிகாரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்... கரூர் பஸ் ஸ்டாண்டிலேயே இது எனக்கு 2வது அனுபவம்" என்று வாக்குவாதம் செய்தார் சுமதி.

இதையடுத்து போலீசார் சுமதியிடம், "என்ன நடந்தது? அந்த போதை இளைஞர் யார்?" என்று கேட்டார்கள.. இதைக்கேட்டதும் மறுபடியும் கொந்தளித்துபோனார் சுமதி.

அறிமுகம்: "என்கிட்ட ஒருவன் கேவலமாக, அசிங்கமாக தகாத முறையில் நடந்து கொண்டான் என்று சொல்றேன், ஆனால் நீங்க மறுபடியும் மறுபடியும் யார் அவன்? என்று என்கிட்டியே கேட்கிறீங்க? இப்படியெல்லாம் நடந்துக்கிறவன், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டா இப்படி செய்வான்? போய் கேமராவை பாருங்கள்" என்று சீறினார் சுமதி.

இதையடுத்து, அவரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், சுமதியை பாதுகாப்பாக சேலம் பஸ்ஸில் ஏற்றி, அனுப்பிவைத்தனர்... பிறகு கரூர் நகர போலீஸார் இதுகுறித்து வழக்கும் பதிவு செய்தனர்.. பிறகு பஸ் ஸ்டாண்டிலிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். ஆனால், அந்த கேமராவில், சுமதி மட்டுமே பஸ் ஸ்டாண்டில் இருப்பது போன்ற காட்சி பதிவாகியிருந்ததாம்..

வைரல் வீடியோ: அதனால், சுமதி சொன்ன அந்த போதை நபர் யாரென்றே தெரியவில்லை. அதனால், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் போதையில் திரியும் நபர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆனபோதும், சுமதி பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் இன்னமும் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்தவர் சுமதி.. 54 வயதாகிறது.. மக்கள் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பின் மாநிலப் பொருளாளராகவும் இருக்கிறாராம்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+