கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? பிரஸ்டீஜ் பிராப்ளம் பார்க்கும் 3 கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஏனெனில் கரூர் மாவட்டம் அண்ணாமலையின் சொந்த மாவட்டம். அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊர்.

இதனால் கரூரில் வெற்றி பெற வேண்டும் என்பதை பிரஸ்டீஜ் பிராப்ளமாக பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும் சூழலில் கூட கரூரில் வெல்ல முடியவில்லை என்றால் அது அதிமுகவின் இமேஜை சரிய வைக்கும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இவர் மட்டுமல்ல அண்ணாமலையும் கரூரில் வெல்ல வேண்டும் என்பதை பிரஸ்டீஜ் பிராப்ளமாக பார்க்கிறார். சொந்த ஊரில் பாஜக வெல்லவில்லை என்றால் அது தனது அரசியல் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதுகிறார். அதேபோல் ஆளுங்கட்சியான திமுகவை பற்றியும் சொல்லவே தேவையில்லை.

Edappadi Palaniswami is determined to win the Karur parliamentary constituency

கரூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் வாக்கு வங்கி வலிமையாக உள்ள தொகுதியாகும். காரணம் இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மணப்பாறை, விராலிமலை, கிருஷ்ணராயபுரம், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஆதிக்கம் அதிகம்.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரான சின்னச்சாமி ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. சின்னச்சாமியை பொறுத்தவரை ஏற்கனவே கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனால் தொகுதி முழுவதும் இவருக்கு அத்துப்படி. அதேபோல் அவர் சார்ந்த சமுதாய வாக்கு வங்கியையும் கணிசமாக கையில் வைத்துள்ளார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் யார் போட்டியிடக் கூடும் என்பது இன்னும் குழப்பமாகவே இருந்து வருகிறது. ஜோதிமணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தொகுதி பங்கீட்டில் என்ன முடிவெடுக்கப்படும் என்பது புரியாத புதிராக உள்ளது.

இதனிடையே செந்தில்பாலாஜி டீம் தேர்தலின் போது என்னென்ன வியூகங்களை வகுக்கும், வெற்றிக்காக எப்படியெல்லாம் காய் நகர்த்தும் என்பதை கரூர் சின்னச்சாமி அறியாதவர் அல்ல. இதனால் நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என்ற சவாலுடன் கரூரில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+