கிணற்றில் மிதந்த உடல்கள்.. 2 குழந்தைகளுடன் தந்தை செய்த பகீர்.. ஆடிப்போன கரூர்!
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, காலனி முடிக்கானம், காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் ஜெகன் (29) ஆடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி காயத்திரி (27).
இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தேஜஸ்வி (4), சுவஸ்தி(2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுடன் ஜெகன் மிகவும் அன்பாக இருப்பாராம். ஜெகனுக்கு கடன் தொல்லை அதிகமாகியதாக கூறப்படுகிறது.

குடும்பத்தில் பிரச்சினை
இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அடிக்கடி குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டது இதையடுத்து வீட்டில் இருந்த குழந்தைகளை எடுத்துக் கொண்டு ஜெகன் தனது சொந்த ஊரான வெள்ளகோவில் முத்தூர் அருகில் உள்ள துத்திக்குளம் வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்களும் உறவினர் வீட்டுக்கு செல்வார் என நினைத்துக் கொண்டனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை
இதனை தொடர்ந்து துத்திக்குளம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான கிணறு பக்கம் வந்த ஜெகன், 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளியுள்ளார். பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மூன்று பேரின் உடல்கள் மீட்பு
போலீசார் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு கிணற்றில் இருந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது குழந்தைகள் இரண்டையும் கட்டிப்பிடித்தவாறு ஜெகன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

காரணம் என்ன?
அந்த பகுதியில் இருந்தவர்கள் இதனை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுடன் தந்தை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications