ரூ. 350 கோடி வருவாய் மறைப்பு? 8 நாட்களாக நடந்த ஐ.டி ரெய்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்!
கரூர் : கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத ரூ. 350 கோடி வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் என அவர் சார்ந்த பலரது வீடுகள், அலுவலகங்கள், பண்ணை வீடுகள், ஆடிட்டர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகம், பண்ணை வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

எட்டாவது நாளான இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், நண்பர்கள் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் சோதனை நடந்தது. அங்கிருந்து இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் அதொடர்புடையோரின் இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மே 26ஆம் தேதி 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று முடிவுக்கு வந்தது.
8 நாட்கள் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.350 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சமந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்ததை அடுத்து மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 2 இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குமாறு போலீசாருக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications