மேலிடத்து ஆசி! கரூரில் களமிறங்குவதில் ஜோதிமணி உறுதி! பரபரக்கும் லோக்கல் பாலிடிக்ஸ் பஞ்சாயத்து!
மேலிடத்து ஆசியுடன் மீண்டும் கரூரில் களமிறங்கும் திட்டத்தில் ஜோதிமணி.
கரூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்குவதில் ஜோதிமணி எம்.பி. மிக உறுதியாக இருக்கிறார்.
எக்காரணத்தை கொண்டும் தொகுதி மாற விரும்பாத அவர் இப்போதே ஃபெல்லோஷிப் அடிப்படையில் தன்னார்வலர்களை வைத்து தொகுதி மக்களின் பல்ஸை ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் காரணமாக ஜோதிமணி திண்டுக்கல் தொகுதிக்கு தாவக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில் அதனை அடியோடு திடமாக மறுக்கிறார் ஜோதிமணி.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே பற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் முக்கிய திருப்புமுனை ஏற்படவுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அடுத்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் உலா வந்தது.

ஜோதிமணி மறுப்பு
இதனை அடியோடு திடமாக மறுத்துள்ள ஜோதிமணி எம்.பி., கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டி என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இவருக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் பரிபூரண ஆசியை பெற்றிருப்பதால் லோக்கல் பாலிடிக்ஸை பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் தொகுதி மாறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் ஜோதிமணி, தேர்தல் பணிகளையும் சத்தமின்றி தொடங்கிவிட்டார்.

கரூர் மக்களவைத் தொகுதி
ஃபெல்லோஷிப் அடிப்படையில் தன்னார்வலர்களை வைத்து தொகுதி மக்களின் பல்ஸை ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டார் ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. திருச்சி, திண்டுக்கல், கரூர் என மூன்று மாவட்டங்கள் இதில் வரும் நிலையில், விராலிமலை தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளும் திமுக வசம் உள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இதனிடையே கரூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுகவே களமிறங்க வேண்டும் என்பது கரூர் மாவட்ட திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் எண்ணவோட்டமும் அப்படியே உள்ளதால் கரூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications