அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற ED சோதனை நிறைவு.. ஆவணங்கள் சிக்கியதா?
கரூர்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் அதன் பிறகு கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.

ரெய்டு: இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். உதவியாளர் சங்கர் வீடு உட்பட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.
சங்கர் வீட்டில் இல்லதாதால் அவரது வீட்டின் உரிமையாளர் நேமநாதன் முன்னிலையில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் பல மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை அமலாக்கத்துறை தரப்பில் சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை: முன்னதாக கடந்த ஜூன் 13ஆம் தேதியே அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடித்திருந்தனர்.. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாம் கட்டமாக இப்போது கரூரில் 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல கோவையில் இரண்டு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.
முதலில் கடந்த மே 26ஆம் தேதி உறவினர் நண்பர்கள் வீடுகளில் முதற்கட்டமாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தான் வருமானவரி அதிகாரிகளே தாக்கப்பட்டு சம்பவங்கள் எல்லாம் நடந்தன. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இப்போது கரூரில் மீண்டும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 4 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.. சோதனை நடக்கும் அத்தனை இடங்களும் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.. அதேபோல கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றக் கூடும் என்று கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ளதை விசாரணைக் காலமாகக் கருதக் கூடாது என்றும் ஊழல், பொதுமக்கள் பணத்தைக் கையாடல் செய்தல் உள்ளிட்ட புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன என்றும் அமலாக்கத் துறை சார்பில் முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அமலாக்கத் துறை இப்போது கரூரில் சோதனையை ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications