கரூரில் 8 நாட்களாக நடைபெற்ற ஐ.டி ரெய்டு நிறைவு.. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
கரூர் : கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கரூரில் மின்சாரம் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி காலை முதல் தொடர் சோதனை நடத்தி வந்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில் சோதனை நடைபெற்ற போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27ஆம் தேதி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது ஒருசில இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகம், பண்ணை வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

எட்டாவது நாளான இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், நண்பர்கள் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் நேற்று மதியம் முதல் சோதனை நடந்தது. இன்றும் சோதனை தொடர்ந்த நிலையில், இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் கொங்கு மெஸ் உணவு விடுதிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து இருந்த நிலையில், அந்த சீல் அகற்றப்பட்டு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் அதொடர்புடையோரின் இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கரூரில் சுமார் 20 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications