அப்பார்ட்மென்ட்டில் விபச்சாரம்.. யாருங்க அந்த பொண்ணு.. கரூரில் கதவை தட்டிய நபர்.. என்னாச்சு தெரியுமா
கரூர்: அப்பார்ட்மென்ட் வீட்டில் பாலியல் தொழில் நடக்கிறதாம்.. அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. ஆனால், வசமாக மாட்டிக் கொண்டு அசிங்கப்பட்டுள்ளார்.
கரூர் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள வேம்பு மாரியம்மன் கோயில் அருகில், நல்லதங்கால் ஓடைத்தெரு உள்ளது.. இந்த தெருவில் நிறைய அப்பார்ட்மென்ட் வீடுகள் உள்ளன.. இதில் ஒவ்வொன்றிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்..

மதுபோதை: இந்தநிலையில், நேற்று மதியம் இங்கிருந்த ஒரு வீட்டில், யாரோ கதவை தட்டியிருக்கிறார்கள்.. அதனால், அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து பார்த்தபோது, இளைஞர் ஒரு மதுபோதையில் நின்றுகொண்டிருந்தார்..
யார் நீங்கள்? என்ன வேண்டும் என்று அந்த பெண் விசாரித்திருக்கிறார்.. உடனே அந்த இளைஞர், "இது விபச்சாரம் செய்யும் வீடுதானே? 1000 ரூபாய் தருவதாக சொன்னேனே? நீங்கதானே என்னை கூப்பிட்டீங்க" என்று சொல்லி உள்ளார்.
அலறல் சத்தம்: "இது பாலியல் தொழிலாளியின் வீடு தானே?" என்று இளைஞர் கேட்கவும், அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.. உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பார்ட்மென்ட் வீடுகளில் இருந்த மொத்த பேரும் திரண்டு வந்துவிட்டார்கள். இளைஞரை பற்றி சொன்னதுமே, ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், அந்த நபரை பிடித்து, கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக வெளுத்தனர்.
அதற்குள் போலீசுக்கும் தகவல் தந்து வரவழைத்தார்கள்.. போலீசார் உடனடியாக அப்பார்ட்மென்ட்டுக்கு விரைந்து வந்தார்கள்.. அந்த போதை இளைஞரை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்றார்கள்.
விபச்சாரம்: அவர் பெயர் சதீஷ்குமார்.. நாமக்கல் மாவட்டம் வரவனை பகுதியை சேர்ந்தவராம்.. இன்னும் கல்யாணமாகவில்லையாம். அடிக்கடி கரூருக்கு வந்து போதுதான், விபச்சாரம் செய்யும் பெண்ணின் தொடர்பு கிடைத்துள்ளது..
நேற்றைய தினமும் கரூருக்கு வந்தபோது, சதீஷ்குமார் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.. அதற்கு அந்த பெண், தான் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் அட்ரஸை தந்து, தன்னுடைய வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்..
மதுபோதை: உடனே சதீஷ்குமார் மதுபோதையிலேயே அப்பார்ட்மென்ட்டுக்கு சென்றுள்ளார். வழக்கமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் ஒரே மாதிரி இருக்கும் என்பதால், வீடு மாறி சென்றுவிட்டதாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், சமீபகாலமாகவே குடியிருப்பு பகுதிகளில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக அந்த பகுதி மக்கள் கொந்தளித்து சொல்கிறார்கள்.. யார் யாரோ மர்ம நபர்கள் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.. இதுகுறித்து போலீசில் புகார் சொன்னாலும், சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது குடியிருப்புவாசிகளை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
மர்மநபர்கள்: எப்படியோ, போதைநபர் காரணமாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் வண்டவாளம் வெளியே வந்துவிட்டது என்றாலும் அந்த பெண் யார்? அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications