CBI ஆபீஸ் போனால் சிக்கலாகிடும்! பின்வாங்கிய விஜய்? தனக்கு பதில்.. பவர் ஆப் அட்டர்னியை அனுப்ப முடிவு?
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பில், நடிகர் விஜய்க்கு சிபிஐ தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 12 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்மனை நேரடியாக எதிர்கொள்ளாமல், தனது சார்பாக ஆஜராவதற்காக, விஜய் தனது பொருளாளர்களில் ஒருவருக்கு அதிகாரப் பத்திரம் வழங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சட்டபூர்வமான இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் சுமார் ₹5 லட்சம் செலவில் ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் வழக்கு - விஜய் விசாரணை
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். அவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."
விஜய் டெல்லி பொங்கல்
"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.
கரூர் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய்க்கு பொங்கல் பண்டிகைக் காலத்தில் சரியாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் விஜய் பொங்கலை டெல்லியில் கொண்டாடினாலும் அதிசயம் இல்லை என்கிறார்கள்.
அஜித் குமார் வாக்குமூலம்
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய அஜித்குமார், முக்கிய சாட்சியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த நாளில் நடந்த நிகழ்வுகளின் வரிசையை அஜித்குமாரிடம் விரிவாகக் கேள்வி கேட்டுள்ளனர். அன்றைய தினத்திற்கான அசல் திட்டம் என்ன, கரூருக்கு பயணிக்க டிரைவருக்கு எப்போது அறிவுறுத்தல்கள் கிடைத்தன, மற்றும் அவர் சம்பவ இடத்தை எப்போது அடைந்தார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
காவல்துறை அவருக்கு ஏதேனும் வழிமுறைகளை வழங்கியதா அல்லது வாகனத்தை சாலையின் எதிர் திசையில் நிறுத்தும்படி யார் அறிவுறுத்தினார் என்றும் விசாரிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டச் சொன்னது யார், சம்பவம் நடந்தபோது அவர் வாகனத்திற்கு முன்னால் தனிப்பட்ட முறையில் எதைக் கண்டார் என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது குறித்தும் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கெல்லாம் அஜித் குமார்.. விஜய்க்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு சிக்கலை ஏற்படும் சில கடுமையான பதில்களை அவர் கூறியதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு நிலைமை தெரிந்ததா, சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும் ஏன் பேச்சு தொடர்ந்தது என்றும் அஜித்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. வாகனத்திற்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து விஜய்க்கு யார் தகவல் தெரிவித்தனர் என்பதை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் விஜய்யை சிக்க வைக்கும் சில பதில்களை அவர் அளித்துள்ளாராம்.
கூடுதலாக, அஜித்குமாரும் விஜயும் தவிர, சம்பவம் நடந்தபோது வாகனத்திற்குள் யார் யார் இருந்தார்கள் என்று அடையாளம் காட்டும்படி அஜித்குமாரிடம் கேட்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பங்கு மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து இதில் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த விசாரணையில் 90-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அஜித்குமார் அளித்த பதில்கள் மற்றும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், விஜய்க்கு சம்மன் அனுப்பப்படலாம் என்கிறார்கள்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி












Click it and Unblock the Notifications