எந்த தகவலும் எனக்கு சொல்வதில்லை! பிறகெதுக்கு பதவி! குட் பை! திமுக ஐடி விங் நிர்வாகி ராஜினாமா!
கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதோடு தன்னால் அதிமுக அடிமை போல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தன்னிடம் எந்த ஒரு தகவலும் சொல்வதில்லை என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் தன் மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக இன்னும் தாம் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருப்பதாக உள்ளக் குமுறலை கொட்டியிருகிறார்.

திமுக வரலாற்றில் முதல் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அணிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகிய பிறகு ஆட்சிப்பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்யப்பட்டார். திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 23,000 நிர்வாகிகளை கொண்ட கட்டமைப்புடன் திகழ்கிறது திமுக ஐடி விங். மண்டல அளவில் தொடங்கி ஒன்றியம் வரை தகவல் தொழில் நுட்ப அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் லோகு.
இவருக்கும் கரூர் மாவட்ட திமுக ஐடி விங் அமைப்பாளருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் இருவருமே அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள். அவர் மட்டும் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால் இரண்டு பேரையும் அழைத்துப் பேசி நிலைமையை சுமூகமாக்கியிருப்பார். இந்தளவுக்கு ஒரு நிர்வாகி ராஜினாமா செய்யும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்க மாட்டார். ஆனால் அவரோ 100 நாட்களை கடந்து சிறையில் இருப்பதால் கரூர் மாவட்ட திமுகவில் கோஷ்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
கிபி கிமு போல், மூன்று மாதங்கள் முன், மூன்று மாதங்களுக்கு பின் என்று கரூர் மாவட்ட திமுகவை பற்றி பெரிய கதையையே கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு இப்போது நிர்வாகிகள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications