ஜஸ்ட் 4% தான் வித்தியாசம்.. கரூரில் கரை சேர்வாரா ஜோதிமணி? தந்தி டிவியின் பரபர எக்ஸிட் போல் ரிசல்ட்
கரூர்: கரூர் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவியின் தேர்தலுக்க பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அதிமுக வேட்பாளர் தங்கவேலுவுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாகவும், வெறும் 4 சதவீத ஓட்டில் வெற்றி நிர்ணயம் செய்யப்படுவதாக தந்தி டிவி எக்ஸிட் போல் ரிசல்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி தந்திடிவி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி நிலவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. கரூர் தொகுதிக்கான ரிசல்ட்டும் வெளியாகி உள்ளது. கரூர் லோக்சபா தொகுதி மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள ஜோதிமணி மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல், பாஜக சார்பில் செந்தில் நாதன், நாம் தமிழர் சார்பில் கருப்பையா போட்டியிட்டுள்ளார்.
இதில் கரூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி எக்ஸிட் போல் ரிசல்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணி எம்பி வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிமணி எம்பிக்கு 36 சதவீத ஓட்டு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் தங்கவேலுவுக்க 32 சதவீத ஓட்டும், பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் 23 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications