கரூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: அண்ணாமலை மண்ணில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி

Subscribe to Oneindia Tamil

கரூர் : கரூர் லோக்சபா தொகுதியில் அத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்பியாகிறார்.

கரூர் லோக்சபா தொகுதியில் ஜோதிமணி (காங்கிரஸ்), கே.ஆர்.எல்.தங்கவேல் (அதிமுக), வி.வி.செந்தில்நாதன் (பாஜக), டாக்டர் ஆர்.கருப்பையா (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

Lok Sabha Election 2024 karur 2024

இந்த தொகுதி 2009ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இதில் வேடந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (எஸ்சி), மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் ஒரு தனித் தொகுதிகளும் 5 பொதுத் தொகுதிகளும் உள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் ஜோதிமணி. இவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர். சோனியாவின் குட் வில் புக் லிஸ்ட்டிலும் இருக்கிறார். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். ஜோதிமணிக்கு டெல்லி தலைமையில் அதிக செல்வாக்கு இருக்கிறது.

எனினும் ஜோதிமணிக்கு இந்த முறை வாய்ப்பு தர கூடாது என கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் போர்க் கொடி உயர்த்தினர். ஆயினும் டெல்லியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவருக்கு இந்தத் தேர்தலில் சீட் கிடைத்துவிட்டது. மேலும் திமுகவின் செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவின் தம்பிதுரைக்கு எதிராக எப்படி அதிருப்தி நிலவியதோ அது போல் ஜோதிமணிக்கும் இந்த முறை நிலவுகிறது. எனவே ஜோதிமணிக்கு இந்த முறை அத்தனை எளிதில் வெற்றி கிட்டாது என்கிறார்கள். மேலும் ஜோதிமணிக்கு பாஜக வேட்பாளர் டஃப் கொடுப்பார் என்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர் தங்கவேல், தமக்கான வாக்கு பலத்தை முழுமையாக நம்பி இறங்கியுள்ளார். இவர் தொகுதியில் அறிமுகமில்லாதவர். பாஜகவின் செந்தில் நாதனோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதி கரூர் என்பதால் அந்த நம்பிக்கையில் அவர் களம் கண்டதாக தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கருப்பையா கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம்

கரூர் லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது கரூர் எம் பி ஜோதிமணி முன்னிலை வகித்து வருகிறார். வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் சிறிது நேரத்தில் எண்ணத் தொடங்கப்பட்டது. அதில் ஜோதிமணி 534906 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 368090 வாக்குகளும், பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் 102482 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

தம்பிதுரை(அதிமுக) 3,80,542
கே. சி. பழனிசாமி(திமுக) 3,33,288
ஆர். இராமநாதன்(தேமுதிக) 51,196
ஆர். நடராசன்(கொமுபே) 14,269

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

மு. தம்பிதுரை(அதிமுக) 5,40,722
சின்னசாமி(திமுக) 3,45,475
என். எஸ். கிருஷ்ணன்(தேமுதிக) 76,560
ஜோதிமணி(காங்கிரஸ்) 30,459

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

ஜோதிமணி (காங்கிரஸ்) 6,95,697
தம்பிதுரை(அதிமுக) 2,75,151
கருப்பையா(நாம் தமிழர் கட்சி) 38,543
தங்கவேலு(அமமுக) 31,139

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+