கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலை செய்ய விடவில்லை.. பட்டென கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராடிய ஜோதிமணி.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போராட்டம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஏன் இந்த திடீர் போராட்டம்? | Karur MP Jothimani Protest | Oneindia Tamil

    மத்திய அரசின் சமூக நீதி துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் என்ற திட்டம் ADIP என்ற பெயரின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ADIP திட்டத்தின் கீழ் நாடு முழுக்க மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், மூன்று சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்

    தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டத்தில் ADIP திட்டம் கீழ் மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

     கனிமொழி

    கனிமொழி

    திமுக எம்பி கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியில் ADIP திட்டத்தின் கீழ் உதவிகளை பெற்று மக்களுக்கு வழங்கினார். பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் இந்த உதவிகளை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் ADIP திட்டம் மூலம் இதுவரை உதவிகளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

     ஜோதிமணி

    ஜோதிமணி

    கரூரில் இந்த ADIP திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்காத கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீது கரூர் எம்பி ஜோதிமணி விமர்சனம் வைத்துள்ளார். அதோடு ADIP தொடர்பான பணிகளை செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு இடையூறு விளைவிப்பதாகவும் ஜோதிமணி எம்பி புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாட்டன் ஜோதிமணி எம்பி இன்று போராட்டம் நடத்தியதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

    போஸ்ட்

    போஸ்ட்

    இது தொடர்பாக ஜோதிமணி செய்துள்ள போஸ்டில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார்.

    கரூர்

    கரூர்

    கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன்., என்று போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Karur MP Jothimani protest against district collector on ADIP program.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X