நட்பை மறக்கடித்த காமம்.. துடிக்க துடிக்க பறிபோன உயிர்.. நண்பர்களே போட்ட "ஸ்கெட்ச்" - அலறும் கரூர்
கரூர்: கரூரில் நடைபெற்றுள்ள சம்பவம் அந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. காமம் தலைக்கு ஏறியதால் உயிருக்கு உயிராக பழகிய நண்பனை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர் சில கொடூரர்கள்.
நண்பனின் மனைவியை அடைய வேண்டும் என்ற மோகம்தான் அந்த இளைஞர்களை இந்த விபரீத காரியத்தை செய்ய வைத்திருக்கிறது.
நண்பர்கள் என்ற பெயரில் பழகும் அனைவரையுமே அப்பாவித்தனமாக நம்பி விடக்கூடாது என்பதற்கு, இந்த சம்பவமே சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

திருமணம் முடித்த நண்பன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (33). இவருக்கு அந்தப் பகுதியில் நண்பர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. தினமும் அவரது நண்பர்கள் ராஜீவ்கா்நதியின் வீட்டுக்கு வருவதும், சாப்பிட்டுவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த போதிலும், தனது நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

நண்பனின் மனைவி மீது மோகம்
அந்த வகையில், ராஜீவ்காந்தியின் நண்பரான ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (30) என்பவரும் அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, ராஜீவ்காந்தியின் மனைவியின் மீது நவாஸுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜீவ்காந்தி இல்லாத சமயங்களில் அவரது வீட்டுக்கு நவாஸ் சென்றிருக்கிறார். ராஜீவ்காந்தியின் மனைவியும் நவாஸுடன் சகஜமாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில், நவாஸின் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட ராஜீவ்காந்தியின் மனைவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

கண்டித்த நண்பன்
எனினும், நவாஸ் அடிக்கடி ராஜீவ்காந்தியின் மனைவியை தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையடுத்து, நவாஸின் செயல்கள் குறித்து தனது கணவர் ராஜீவ்காந்தியிடம் கூறி அவர் அழுதிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்தி, நவாஸை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. மேலும், "இனி என் வீட்டிற்கு நீ வர வேண்டாம்" எனவும் கூறியுள்ளார்.

தீர்த்துக்கட்டிய கொடூரம்
இதனால் ராஜீவ்காந்தி மீது கடும் கோபமடைந்த நவாஸ், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக தனது நண்பன் கருப்பசாமியையும் துணைக்கு சேர்த்துள்ளார். அதன்படி, கடந்த 10-ம் தேதி இரவு, வேலை முடிந்து வந்துக் கொண்டிருந்த ராஜீவ்காந்தியை வழிமறித்த நவாஸும், கருப்பசாமியும் உருட்டுக்கட்டையாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜீவ்காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவான நவாஸையும், கருப்பசாமியையும் கைது செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications