ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில்.. புஸ்ஸி ஆனந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விஜய் பரப்புரையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மதியழகன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெள்ளிக்கிழமை இரவு முதல், சனிக்கிழமை காலை முதலே என விஜயைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதியில் திரண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசப் பேசவே பலரும் மயக்கமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கல், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பரப்புரையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என குறிப்பிட்டு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதன்மையான நபர்களாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (A1), புஸ்ஸி ஆனந்த் (A2), நிர்மல் குமார் (A3) மற்றும் மற்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத்தை தடுக்கும் சட்டம் (TNPPDL Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
BNS பிரிவு 105 - கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை
BNS பிரிவு 110 - குற்றமற்ற கொலை செய்ய முயற்சி
BNS பிரிவு 125(b) - மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர அல்லது அலட்சிய செயல்கள்
BNS பிரிவு 223 - பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை
TNPPDL Act பிரிவு 3 - பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் எங்கே உள்ளார் என்ற எந்த தகவலும் இதுவரை இல்லை. 4 பிரிவுகளில் போடப்பட்ட இந்த வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications