கரூர் கூட்ட நெரிசல்! உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் முதலாம் ஆண்டு நினைவு! கண்ணீரில் உறவுகள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி, தவெக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்த துயர நிகழ்வில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், தவெகவினரும் மெழுகு பத்தி ஏந்தி, மலர் தூவி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

karur stampede
தற்போதைய தமிழக முதல்வர், தவெக தலைவருமான விஜய் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக கரூர்- ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரத்திற்கு வருகை தந்தார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விஜய், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட நபர்களிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த குடும்பங்களை நேரில் சந்தித்து பல்வேறு கட்சியினர் ஆறுதல் தெரிவித்த நிலையில் ஜோசப் விஜய், உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களையும் சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உறவுகளை இழந்த குடும்பங்கள் தற்போது வரை துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக 41 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருடன் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் இணைந்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளரும் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+