கரூர் இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. பிசினஸ் செய்ய ரூ.15 லட்சம் வரை வங்கி கடன், மானியம்.. கலெக்டர் தகவல்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. சொந்தமாக தொழில் தொடங்க அரசு கடன் உதவி வழங்குகிறது.. தொழில் தொடங்க தேவையான நிதியில் வங்கிக் கடனுடன் மானியமும் கிடைக்கிறது.. அந்த திட்டம் என்ன? யார் யாரெல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்? இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியரே வெளியிட்டிருக்கிறார்.. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!

தமிழ்நாடு அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) என்பது, வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்கி வருமானம் பெறுவதற்கு உதவும் திட்டமாகும்.

Karur

கரூர் இளைஞர்கள்

இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதுடன், அதன் மூலம் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக வங்கிக் கடனுடன் அரசு மானிய உதவியும் வழங்குகிறது.

இந்தத் திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களை தொடங்க அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற முடியும். இதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

பிசினஸ் செய்ய வங்கிக் கடன்

அதுமட்டுமல்ல, திட்டச் செலவில் 25 சதவீதம் வரை அரசு மானியம் கிடைக்கும். இந்த மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.3.75 லட்சம். எளிமையாகச் சொன்னால், ரூ.15 லட்சம் வரை திட்டம் போட்டு தொழில் தொடங்கும் ஒருவருக்கு, தகுதிக்கு ஏற்ப அதில் ஒரு பகுதியை அரசு மானியமாக ஏற்றுக்கொள்கிறது; மீதமுள்ள தொகைக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கவும் சில தகுதிகள் இருக்கின்றன. பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற சிறப்புப் பிரிவினருக்கு வயது வரம்பு 55 வயது வரை உள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் தொடங்க விரும்பும் கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் தமிழக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் அலுவலகத்தை அணுகலாம். மேலும், 04324 255179 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்" என்று மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+