கரூரில் பயங்கர தீ விபத்து.. 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகின!
கரூர்: கரூரில் பேருந்துகளுக்கு கூடு கட்டும் இடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன.
பேருந்து மற்றும் லாரிகளுக்கு பாடி கட்டும் இடம் என்றால் அது கரூர்தான். சென்னை அசோக் லேலாண்டில் பேருந்துகளை, லாரிகளை என்ஜினுடன் கூடிய அடி பகுதியை வாங்கி சென்று, கரூரில் வைத்துதான் முழு கூடும் கட்டப்படும்.

தமிழ்நாடு மட்டுமல்லாது சில நேரங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கூட இங்கு பாடி கட்ட வாகனங்கள் வருவதுண்டு. கரூர் முழுவதும் பல இடங்களில் பாடி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரின் சின்னமநாயகன்பட்டியில் பாடி கட்டும் இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மதியம் 3 மணி வாக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 23 பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன. ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கு எளிதாக பரவியிருக்கிறது.
இங்கு மொத்தம் 50 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ பரவியதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விபத்து குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "முருகன் என்பவர் பழைய பேருந்துகளை வாங்கி அதில் உள்ள பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்த வந்திருக்கிறார். எனவே அவருக்கு சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் இருந்தன. மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனவே நாங்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்" என்று கூறியிருக்கின்றனர்.
சாதாரணமாக ஒரு பேருந்தின் அடிபாகத்தின்(Chassis) விலை மட்டும் தோராயமாக ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு பாடி கட்ட ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆக ஒரு முழு பேருந்து ரூ.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் வரை செலவை இழுத்துவிட்டு இருக்கும். ஆனால் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பழைய பேருந்துகள் என்பதால் நஷ்டம் குறைவாகவே ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கோடை காலங்களில்தான் தீ விபத்துகள் அதிகம் நடக்கும். இது தென்மேற்கு பருவமழை காலம். இந்த சமயத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது கேள்வியாக இருக்கிறது. அதேபோல, பழைய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது என்று சொல்லப்படுகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications