நீயே 16 கட்சிக்கு போய்ட்டு வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வச்சுக்கோ.. விஜயபாஸ்கர் விளாசல்
செந்தில் பாலாஜியை கடுமையாக அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
Recommended Video

கரூர்: "நீயே 16 கட்சிகளுக்கு போய் வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வெச்சிக்கோ.. உன் பொழப்பு தண்டவாளத்தில் ஏறிடும்" என்று செந்தில்பாலாஜியை அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான பெரியகுளத்துப்பாளையத்தில் கட்டப்பட்ட ரயில்வே குகைவழிப்பாதையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதில், "என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். ஆனா இவரு என்னை குறை சொல்லிட்டே இருக்காரு. நான் என்ன சொல்றேன்னா... நீயே 16 கட்சிகளுக்கு போயிட்டே..
இந்த திட்டங்களை எல்லாம் நான் செஞ்சேன்.. நான் செஞ்சேன்னு சொல்லக்கூடாது.. வெட்கம், ரோஷம் இருந்தா இனி நான் செஞ்சேன்னு எதையும் சொல்லக்கூடாது. இதே குளத்துபாளையத்தை சேர்ந்தவரோட நிலத்தை அடிச்சி புடுங்கினது யார்? அது சம்பந்தமா யார் மேல கேஸ் இருக்குங்றதை எண்ணி பார்க்க வேண்டும்.
24 ஆயிரம் லிட்டர் எரிசாராய கடத்தி, நீ யார் கால்ல போய் விழுந்து, கேஸ்-ல இருந்து தப்பிச்சேன்னு ஊருக்கே தெரியும்.. கள்ளச்சாராயத்தை பாட்டிலுக்குள்ள அடைச்சி வித்தது யாருன்னு ஊருக்கே தெரியும். வழக்கு பத்தி பேசலாமா? இதையெல்லாம் நான் பேச ஆரம்பிச்சால், உன் பொழப்பு தண்டவாளத்தில் ஏறிடும்" என்று பேசினார்.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications