கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார் அண்ணாமலை".. செய்தியாளரின் கேள்வி.. அடக்க முடியாமல் சிரித்த செந்தில் பாலாஜி.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த ஒரு கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில் அதற்கு சிரிப்பை அடக்க முடியாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்த சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    சார் அண்ணாமலை.. செய்தியாளரின் கேள்வி.. அடக்க முடியாமல் சிரித்த செந்தில் பாலாஜி

    கரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிலரங்கம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், எம்பி அப்துல்லா, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    2 முறை கேட்டேன்... அந்த நம்பரை மட்டும் என்கிட்ட சீமான் சொல்லவே இல்லையே... அமைச்சர் செந்தில் பாலாஜி 2 முறை கேட்டேன்... அந்த நம்பரை மட்டும் என்கிட்ட சீமான் சொல்லவே இல்லையே... அமைச்சர் செந்தில் பாலாஜி

     அண்ணாமலை குறித்த கேள்வி

    அண்ணாமலை குறித்த கேள்வி

    அப்போது அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு 72 மணி நேரத்தில் குறைக்காவிட்டால் போராட்டம் என கெடு விதித்துள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சிரிப்பை அடக்க முடியாமல் நீங்கள் பதில் சொல்லுங்கள் என அமைச்சர் சிவசங்கரிடம் தெரிவித்தார்.

    சிரித்த செந்தில் பாலாஜி

    சிரித்த செந்தில் பாலாஜி

    அமைச்சர் சிவசங்கர் நீங்களே சொல்லுங்கள் என்றார். உடனே மீண்டும் சிரிப்பை அடக்க முடியாமல் நீங்களே சொல்லுங்கள் என்றார் செந்தில் பாலாஜி. அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறுகையில் சிலிண்டருக்கு ஏற்கெனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கும் பணியை அவர்கள் ஒழுங்காக செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி


    பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடிமகன்களின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என சொன்னாரே அதை செய்தாரா?

    அப்போது டீசல் விலை என்ன?

    அப்போது டீசல் விலை என்ன?

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டீசல் விலை என்ன? பாஜக ஆட்சி காலத்தில் டீசல் விலை என்ன? இது தேவையில்லாமல் மக்கள் மீது அவர்கள் ஏற்றிக் கொண்டிருக்கும் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் விலையை குறைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மாநில அரசுக்கு வரும் வருவாயில் விலையை குறைக்க சொல்வது என்பது தேவையற்ற வாதம் என்றார்.

    English summary
    Minister Senthil Balaji made continuous laugh when he was asked about TN BJP President Annamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X