திமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்
திமுக எம்எல்ஏவுக்கு எம்ஆர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்
Recommended Video
கரூர்: "திமுகவில் 70 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம்... 16 கட்சிகளுக்கு பதவிக்காக சென்றவரை பக்கத்தில் வைத்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டுமென்றால் இளைஞரணி பொறுப்பு கொடுக்கலாம்" என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார திமுக திட்டமிட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினமே அப்பணியை தொடங்கிவிட்டது.
இருப்பினும் திட்டமிட்டபடி அதே குளத்தின் மற்றொரு பகுதியை திமுக இளைஞரணி தூர்வாரி வருகிறது. இதனால் தகராறு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக பேனர்களை வைத்து கொண்டும், போலீஸ் பாதுகாப்புடனும் இந்த தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர் அணி
இந்த சமயத்தில்தான், குளத்தை தூர்வார செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற திமுக எம்எல்ஏக்கள் அங்கு சென்று குளத்தின் மற்றொரு பகுதியில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி, "தூர்வாரும் பணி திட்டத்தை முதன்முதலில் கூறியது, எங்களது இளைஞர் அணி தலைவர். அதன்படி, நாங்க செய்ய இருந்த வேலைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்துள்ளது வரவேற்கத்தக்கதுதான்.

அழைப்பு
எங்கள் தலைவர் கூறியபடி, வருகிற 14ம் தேதி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தேவைப்பட்டால், அமைச்சரும் வந்து எங்கள் திமுக இளைஞர் அணியில் சீக்கிரமாக வந்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளட்டும்" என்று அழைப்பு விடுத்திருந்தார்.

மகேஷ்
மகேஷ் பேசிய இந்த பேட்டி குறித்து விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, "மகேஷ் பொய்யாமொழி, என்னை திமுகவில் வந்து சேர்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுகவில் சேர, வயது இல்லை, ஏனென்றால், திமுகவில் 70 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம்.

நிராகரிப்பு
16 கட்சிகளுக்கு பதவிக்காக சென்றவரை பக்கத்தில் வைத்து கொண்டுள்ளனர். அவர்களை வேண்டுமென்றால், மாணவரணி, இளைஞரணி பொறுப்பு கொடுக்கலாம், ஆனால் என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன். திமுகவில் இணையுமாறு அழைத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இதுதான் என் பதில்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications