செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு!
செந்தில் பாலாஜிக்கு எதிராக மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
Recommended Video
கரூர்: "செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி எங்கே" என்ற பதாகைகளை வைத்து தொகுதி மக்கள் திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு வந்து.. பிறகு திமுகவுக்கு தாவியவர் செந்தில் பாலாஜி. வந்த கொஞ்ச நாளிலேயே எல்லார் காதிலும் புகை வரும் அளவுக்கு மாவட்ட செயலாளர் பதவி தரப்பட்டது.
இந்த புகைச்சல் அடங்குவதற்குள் அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் நிறுத்தப்பட்டு எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றார். இப்போது திமுகவின் மிக முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

சலசலப்புகள்
செந்தில் பாலாஜி, பிரச்சாரத்தின்போது, தான் வெற்றி பெற்றவுடன் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 சென்ட் இலவச நிலம், அதில் 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் கொடுப்பதாக பொதுமக்களிடையே அறிவித்தார். இப்படி எல்லாருக்கும் 3 சென்ட் நிலங்கள் தருவது சாத்தியமா என்றும் அப்போது கேள்விகள், சலசலப்புகள் எழுந்தன.

முணுமுணுப்புகள்
ஒருவேளை 22 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என்ற நம்பிக்கையோடும் இந்த அறிவிப்பினை செய்துவிட்டாரோ என்றும்கூட அங்கலாய்ப்புகள் எழுந்தன.

அதிருப்தி
இப்போது, அந்த இலவச நிலம் பற்றி செந்தில்பாலாஜி எதுவுமே பேசாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் செல்கிறார், ஆனால் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் செந்தில் பாலாஜி வரவில்லை என்று வருத்தத்தில் உள்ளனராம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில், இன்று செந்தில்பாலாஜி, நெடுங்கூர் பகுதி ஏரியில் தூர்வாரும் பணிக்காக சென்றிருந்தார். அவருடன் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற திமுக எம்எல்ஏவான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றிருந்தார். அப்போது இந்த இரு எம்எல்ஏக்களுக்கு வழிநெடுகிலும் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

முற்றுகை
"3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி", "எங்கே 3 சென்ட் நிலம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் திமுக எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் வெளியேறினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications