4 மணி நேரமே தூக்கம்.. சரியா சாப்பிடுவதில்லை.. தீயாய் வேலை செய்யும் செந்தில் பாலாஜி.. !
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, படு மும்முரமாக பாடுபட்டு வருகிறாராம். அவரது பிரச்சார வேகத்தைப் பார்த்து பரம்பரைத் திமுகவினரே அசந்து போய் நிற்கின்றனராம்.
அதிமுகவில் முக்கியமான தள கர்த்தராக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. இன்று தான் கற்று வைத்துள்ள மொத்த வித்தையையும் அரவக்குறிச்சியில் இறக்கி வைத்து வருகிறாராம் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதீத கவனம்
இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் திமுக தேர்தலில் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறது.

திமுக - அமமுக போட்டி
இந்நிலையில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனும், அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதும் கடும் டப் கொடுக்கிறார்களாம்.

அமமுக திடீர் சுறுசுறுப்பு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வரை அமமுக வேட்பாளருக்கு தொகுதியில் வரவேற்பு இல்லாத நிலை இருந்ததாம்.ஆனால் அவர் கடைசி நேர வித்தை காட்டியதால் சாகுல் ஹமீதுக்கு அரவக்குறிச்சியில் மவுசு ஏறிவிட்டதாம்.

உஷாரான செந்தில் பாலாஜி
இதனால் திகைத்துப்போன செந்தில்பாலாஜி ஓய்வின்றி, உறக்கமின்றி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாராம். செந்தில்பாலாஜி ஆதரவாளர் ஒருவரிடம் நாம் பேசிய போது, ஒரு நாளைக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே செந்தில்பாலாஜி தூங்குகிறார்.

சாப்பாடு சரியில்லை
உணவும் முறையாக சாப்பிடாமல் பிரச்சாரத்தில் சுற்றுவதால் அவ்வப்போது உடல்நிலை மோசமாகிறது. தூக்கமின்மையோடு சுற்றுவதால் சில நேரங்களில் செந்தில்பாலாஜிக்கு தலைசுற்றலும் ஏற்படுகிறதாம். இருப்பினும் அதை சட்டை செய்யாமல் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்போடு அவர் சுற்றுவதை பார்த்தால் எங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது என்கிறார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications