கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து வந்தவர் செந்தில் பாலாஜி. சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர், முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் கூட. தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் அவர் தினகரன் அணியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி தரப்படும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. அதன்படி தற்போது அவரை திமுக பொறுப்பாளராக கட்சி பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுவரை பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில நெசவாளர் அணி தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications