"சரியான ஆள்".. 100+ பேரை இறக்கி.. அஸ்திவாரத்தையே ஆட வைத்த செந்தில்பாலாஜி.. தேடி செல்லும் "பவர்"?

Subscribe to Oneindia Tamil

கரூர்: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக கரூரில் நடக்கும் விஷயங்கள் திமுகவை உற்சாகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை திமுக முன்கூட்டியே தொடங்கிவிட்டது. ஆளும் கட்சி என்பதால் இதில் எப்படியாவது அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில் திமுக தீர்க்கமாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினும் திமுக மாவட்ட செயலாளர்களை அழைத்து தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும், தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிவிட்டார். பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே தேர்தல் பணிகள் சுட சுட நடந்து கொண்டு இருக்கின்றன.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

இந்த நிலையில்தான் மற்ற மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடுத்தடுத்த அதிரடியை மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக அதிமுகவின் அஸ்திவாரத்தை காலி செய்யும் வகையில் அங்கு பாரம்பரியமான அதிமுக நிர்வாகிகளை திமுக பக்கம் செந்தில்பாலாஜி "பார்சல்" செய்து கொண்டு இருக்கிறார்.

கரூர்

கரூர்

திமுகவில் செந்தில்பாலாஜி இணைந்ததில் இருந்தே கரூரில் வலுவான கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. ஸ்டாலினின் "குட் புக்கில்" இடம்பெறும் வகையில் தொடக்கத்தில் இருந்தே செந்தில்பாலாஜி தீவிரமாக வேலை செய்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் இரண்டிலும் நல்ல ரிசல்ட்டை கட்சிக்கு கரூரில் தேடிக்கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலோடு முடியாமல் தேர்தலுக்கு பின்பும் திமுகவை கரூரில் வலிமைப்படுத்தும் பணிகளில் செந்தில் பாலாஜி மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

எப்படி

எப்படி

அதிலும் உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து அதிமுகவின் கவுன்சிலர்களை எல்லாம் தேடிப்பிடித்து செந்தில்பாலாஜி தட்டி தூக்கி உள்ளார். கடந்த வாரம் அதிமுகவை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் கரூரில் ஒரே நாளில் திமுகவில் இணைந்தனர். கடவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்வராஜ், கவுன்சிலர்கள் லோகநாதன், வமணி காளிதாஸ், சரோஜா சின்னசாமி போன்ற பிரபலமான அதிமுக கவுன்சிலர்கள் மொத்தமாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்கள்.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி நேரடியாக பேசி இவர்களை மொத்தமாக அப்படியே திமுக பக்கம் கொண்டு வந்து இருக்கிறார். அதோடு திமுகவின் கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் நொய்யல் சேகர் இதில் முக்கியமான பணிகளை நேரில் கவனித்து, நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்து இருக்கிறார். அதிமுகவின் உள்ளாட்சி அஸ்திவாரத்தை மொத்தமாக இவர்கள் இருவரும் கரூரில் காலி செய்துள்ளனர்.

மேலும்

மேலும்

இதோடு நிர்வாகிகள் "தாவல்" முடியும் என்றுதான் அதிமுகவும் கருதியது. ஆனால் நேற்று 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மேலும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றுள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள், அதிமுகவில் பல காலமாக இருந்தவர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பல முக்கிய நிர்வாகிகள், செந்தில் பாலாஜி ஏற்பாட்டின் காரணமாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 கொங்கு

கொங்கு

இப்படி தொடர்ந்து அதிமுகவில் அடுத்தடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை செந்தில் பாலாஜி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் கட்சி ரீதியாக அவருக்கு கொங்கு மாவட்டங்களில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலை முன் வைத்து, திமுக வலிமையின்றி இருக்கும் கொங்கு மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக அவருக்கு முக்கிய பொறுப்பு பறக்க போகிறது என்று தகவல்கள் வருகின்றன.

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

இவர் கரூரில் செய்ததை போன்ற மேஜிக்கை ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் திமுக எதிர்பார்க்கிறது. கோவையில் சட்டசபை தேர்தலில் திமுக மிக மோசமாக தோல்வி அடைந்த நிலையில் கொங்கில் பவர்புல் ஆட்களை இறக்க திமுக முயன்று வருகிறது. அதற்கு செந்தில் பாலஜ சரியான சாய்ஸ்சாக இருப்பார் கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+