பட்டியல் பெண் சமைத்தால் பசங்க சாப்பிடாது.. அடாவடி பேசிய பெற்றோரை அலறவிட்ட கரூர் கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

கரூர்: பட்டியல் இன பெண் சமைத்தால் எங்கள் பிள்ளைகள் சாப்பிடாது என்று அடாவடியாக பேசிய அரசு பள்ளியின் பெற்றோரை கடுமையாக எச்சரித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் கரூர் கலெக்டர் பிரபு சங்கர்.

கரூர் அருகே அரசு பள்ளியில் பட்டியிலின பெண் காலை சிற்றுண்டி சமைத்துள்ளார். ஆனால் மாணவர்கள் சாப்பிடக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்ததாக செய்திகள் வெளியானது. இதனால் அங்கு சென்ற கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சாதி பெருமை பேசியதாக மாணவரின் பெற்றோர்களை கடுமையாக எச்சரித்தார்.

Students will not eat what a SC woman cooks: karur collector made parents who spoke apologized

தமிழக அரசின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.அந்த வகையில். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 77 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காலை சிற்றுண்டி உணவு திட்டம் சுமார் 705 மையங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் கரூர் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 449 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதனிடையே கரூர் அருகே வேலஞ்செட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பட்டியிலின பெண் காலை சிற்றுண்டி சமைத்துள்ளார். ஆனால் மாணவர்கள் சாப்பிடக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்ததாக செய்திகள் வெளியாகின.

அங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கு மேல் காலை சிற்றுண்டி சாப்பிடுவதில்லை என்றும் அந்த மாணவர்களின் பெற்றோர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண்மணி சமையல் செய்வதால், அதனை யாரும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதனால் உடனடியாக விரைந்து சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மேலன்செட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.அப்போது காலை சிற்றுண்டி உணவு மீதம் இருப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையலரிடம் கேட்டறிந்தார்.

அத்துடன், உணவு அருந்தாத 15 பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விசாரணை நடத்தினார். அப்போது கலெக்டர் பிரபு சங்கரிடம், பாலசுப்பிரமணி என்ற நபர் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த பெண் சமைத்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் உணவு உட்கொள்ள மாட்டார்கள்.மீறி சமைத்து பரிமாறினால், பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்வோம் என அடாவடியாக பேசினார்.

இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசிய பாலசுப்பிரமணியத்தை அரவக்குறிச்சி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பாலசுப்பிரமணியம் பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனிடையே காலை உணவை சாப்பிடாத மாணவர்களின் பெற்றோரிடம் பேசிய கரூர் மாவட்ட கலெக்டர், சாதிய பாகுபாடு காட்டும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

கலெக்டரின் இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் சென்றனர்.காலை உணவை பட்டியலின பெண் சமைத்ததால் சாப்பிட விடாமல் பெற்றோர் தடுத்து, கலெக்டரிடமே அடாவடியாக பேசிய சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+