கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொள்கை அடிப்படையில் கூட்டணி இல்லை.. திமுக- காங் கொள்கையற்ற கூட்டணி.. குழப்பும் தம்பிதுரை

Google Oneindia Tamil News

கரூர்: கொள்கை அடிப்படையில் கூட்டணி இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக- பாமக இரு கட்சிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன. இந்த நிலையில் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் நேற்றைய தினம் முதல்வர் வீட்டிலும், தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிலும் ஆலோசனை நடந்தது.

Thambidurai says that there is no alliance based on policies

இந்த நிலையில் இன்று ராமதாஸ் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் அதிமுகவுடன் பாமக கூட்டணி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில் கொள்கை அடிப்படையில் கூட்டணி இல்லை. எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி. திமுக- காங்கிரஸ் கொள்கையற்ற கூட்டணி என தம்பிதுரை குழப்பும் ரீதியில் விமர்சனம் செய்துள்ளார்.

English summary
Loksabha Deputy Speaker Thambidurai says that there is no alliance based on policies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X