மின்சாரத் துறையில் விஞ்ஞான ஊழல்.. கருணாநிதியை மிஞ்சும் செந்தில் பாலாஜி.. அண்ணாமலை குற்றச்சாட்டு!
கரூர்: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் ஒரு பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கரூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களின் அடிமடியில் கை வைக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தேர்தலின் போது, மாதம் மாதம் மின் கணக்கீடு முறை கொண்டு வரப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறை அமலுக்கு வரவில்லை.

அன்றும், இன்றும்
மத்திய அரசின் மற்ற அறிவுறுத்தல்களை எல்லாம் நிறைவேற்றாமல், லாப நோக்கோடு மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தி இருக்கிறார்கள். 2016ல் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் அதே மு.க.ஸ்டாலின், இன்று செந்தில் பாலாஜியை பாராட்டுகிறார்.

செந்தில் பாலாஜி
கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம். அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும். அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவதே இலக்கு. ஏழை மக்களுக்காக பாஜக எப்போதும் உடன் நிற்கும்.
Recommended Video

மத்திய அரசு
அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும். கருணாநிதியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு செந்தில் பாலாஜி விஞ்ஞான ஊழலில் ஈடுபடுகிறார்.

நோட்டீஸ் பற்றி பேச்சு
இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி 5 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார். இப்போது 6வது கட்சி மாறுவதற்கு செந்தில் பாலாஜி தயாராக உள்ளார். விரைவில் அவர் சிறையில் செல்ல தயாராகி கொள்ளலாம். இதுபோன்ற அரசியல்வாதிகலை அப்புறப்படுத்துவதே பாஜகவின் இலக்கு. ஏழைகள் இருக்கும் வரை பாஜகவுக்கு வேலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications