"சூடா ஒரு டீ கொடுப்பா".. அப்படியே முதல்வர் ஸ்டாலின் பாணியில் கரூரில் கலக்கிய உதயநிதி!
கரூர்: சூடா ஒரு டீ கொடுப்பா என தந்தை ஸ்டாலின் பாணியில் அவரது மகன் உதயநிதியும் கரூரில் களமிறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கு மக்களோடு சகஜமாக உட்கார்ந்து பேசியதை கண்டு அங்கிருந்தவர்கள் பூரிப்படைந்தனர்.
Recommended Video
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டாலின், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக மா சுப்பிரமணியன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
தற்போது ஸ்டாலின் முதல்வராகிவிட்ட நிலையில் பணிச்சுமை காரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். இது குறித்த வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகும். இது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் சைக்கிள் பயணத்தையும் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

செல்பி
அவ்வாறு சைக்கிள் பயணத்தின் போது பொதுமக்களிடம் குறை கேட்பதும் அவர்களுடன் உரையாடுவதும் வழக்கம் . இவருடன் ஏராளமானோர் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். பின்னர் ரிலாக்ஸ் செய்ய ஆங்காங்கே உள்ள டீக்கடைகளில் டீ குடித்துக் கொண்டும் பொதுமக்களுடன் உரையாடுவார். பள்ளி குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்புகள் குறித்து கேட்டறிவார்.

உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை போல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடைகளுக்குச் சென்று அங்கு பொதுமக்களுடன் தேனீர் அருந்துகிறார். மக்களுடன் சகஜமாக பழகுகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வேலாயுதம்பாளையம்
அப்போது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பேக்கரி கடையில் ஒன்றில் அவரே சென்று அந்த கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். அப்போது அருகில் உள்ள மூதாட்டி மற்றும் அங்கிருந்தவர்களை உதயநிதி நலம் விசாரித்தார்.

சூடா ஒரு டீ கொடுப்பா
எப்போதுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்காங்கே பிரச்சாரமோ, அல்லது ஏதேனும் நிகழ்ச்சிக்கோ செல்லும் போது, ஆங்காங்கே டீ கடைக்கு சென்று "சூடா ஒரு டீ கொடுப்பா" என்று தான் கூறி வாங்கி அருந்துவார். அவரது பாணியில் அப்படியே மகன் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications