கரூர் விஜய் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் இறந்தது எப்படி... உச்சகட்ட பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசல் அசம்பாவதித்திற்கு காரணமாக அமைந்தது. இந்த கூட்ட நெரிசலில் 10 பெண்கள் உள்பட 29 பேர் வரை உயிரிழந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஏராளமானோர் காயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் அதிகரித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 8மாதங்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இன்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல்லை பொறுத்தவரை பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. ஆனால் கரூரில் நிலைமை மோசமானது. மிக பெரிய அளவில் கூட்டம் வந்தது. கூட்ட நெரிசல் ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.

Vijay rally Stampede 10 people killed in stampede at Vijay s rally in Karur

ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரித்து பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் பலரும் குழந்தைகளும் மயக்கமடைந்தனர், இதனால் விஜய் தனது உரையை நிறுத்திவிட்டு அமைதியாக இருக்குமாறு கோரினார். அதே நேரத்தில் பலர் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவசரமாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன, மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஏராளமான பெண்க, குழந்தைகள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

கரூர் மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலர் ஒரே நேரத்தில் குவிந்தது தான் கூட்டநெரிசல் ஏற்பட காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள். விஜய்யை காண காலை முதலே கரூரில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியிருந்தது. மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. ரசிகர்கள் எப்படியாவது விஜய்யை பார்க்கும் ஆசையில் முண்டியத்தபடியே இருந்தனர். ஒருகட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் ஒரே நேரத்தில் நெருக்கியதால் பலரும் மூச்சுத்திணறலில் சிக்கி இறந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+